* நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.
* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத்தருகிறார்.
* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியேஉண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.
* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக்காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அளவுடன் பேசுவது நல்லது * திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர ஆடம்பரத்துக்கு அல்ல. * இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால் மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ துன்பமோ இப்போது அறுவடை செய்கிறோம். * சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டும் சொல்வதே சத்தியமாகும். * தெய்வப்பணியை விட்டுவிட்டு தேசப் பணி, மக்கள் பணி என்று புறப்படுவது தவறு. சமூக சேவையும், தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டும். தெய்வ சம்பந்தத்துடன் தான் தேசப்பணி செய்ய வேண்டும். * பணம் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும் போதும், ஒரு சொல்கூட அதிகமாகக் கூடாது. அளவாக, கணக்காகப் பேச வேண்டும். அதனால், நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி பொழுது பயனுள்ளதாகிறது. | |
முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்? * தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது. * பால பிராயத்திலேயே காயத்ரியை ஜபிக்க ஆரம்பித்துவிட்டால் அது பசுமரத்தாணியாக பதியும். காயத்ரியானது முக்கியமான மனோசக்தி, தேஜஸ், ஆரோக்கியம் எல்லாவற்றையும் அபரிமிதமாக தரவல்லது. * நீ பலனை எதிர்பார்க்காமல் தர்மங்களை செய். பலனை கொடுக்க வேண்டியது ஈஸ்வரனின் வேலை என்கிறது உபநிஷதம். * குடும்ப பொறுப்புக்களை கூடிய விரைவில் முதியவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதில் பொது ஜனங்களுக்காக பொறுப்பெடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். தாங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும். * தனக்கென்று எவ்வளவுகுறைவாக செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதை தர்மத்திற்கு செலவழிக்க வேண்டும். * அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்கின்ற காரியங்கள் படாடோபமாகவே முடிந்துவிடும். * நாம் பக்தி செய்வதால் ஈஸ்வரனுக்கோ, குருவுக்கோ எந்த லாபமும் இல்லை. நமக்குதான் பெரிய லாபம். * நம் சரீரத்திற்கு எந்த வியாதி வந்தாலும், எந்த கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் கொடுக்கப்பட்டவை என கருதவேண்டும். இவையெல்லாம் 'தபஸ்' என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.
|
காஞ்சிப்பெரியவர்