Monday, 23 April 2012

அருள் மழை - 43 - மஹா பெரியவாள் - Foreign Trip


வளைகுடா நாடொன்றில் நிறைய பணம் ஈட்டிய என் நண்பர் ஒருவர், காஞ்சி பெரியவரை வணங்கப் போயிருந்தார்.பெரும் தொகை ஒன்றை அவர்முன் வைத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு சுவாமிகள்.
... பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

வைதீக மரபில் வந்த அவரைப் பார்த்து மகா சுவாமிகள்,"கடல் கடக்கக்கூடாது என்கிற தர்மத்தை மீறி நீ போய் சம்பாரிச்ச காசை வச்சு என்னை தர்மம் பண்ணச் சொல்றியா..தர்மத்தை மீறி வந்த காசை வைச்சு தர்மம் பண்ண முடியுமா?" என்று கடுமையான குரலில் கேட்டார்கள்.
காலில் விழுந்து கதறிய நண்பர் "இப்பவே பெரியவா உத்தரவுன்னா வளைகுடா நாட்டு உத்தியோகத்தை விட்டுடறேன்"என்றார்.சிரித்தபடி பெரியவர்,உலகப் படத்தைக் கொண்டுவரச் சொல்லி தரை வழியாகவே அந்த நாட்டுக்கு தொடர் வழி உண்டு என்று விளக்கி,"அப்படி இருந்தால் போகலாம் குத்தமில்ல!" என்று சாஸ்திர விளக்கம் அளித்தார்கள். "கடல்கடந்து போறதுன்னா..முன்னெல்லாம் கப்பல்தான்.. குளிக்கிறது,
அனுஷ்டானம் பண்ரது..இதெல்லாம விட்டுப்போயிடும்.அதனால வேண்டாம்பா..இப்ப என்ன மூணு மணிநேரம்தான்..போ..போ..தப்பில்ல"  என்று சொல்லிச் சிரித்தார்கள். 

அதற்குப் பிறகு சொன்ன விஷயம்தான் முக்கியம்.
"தர்மம் பண்றபோது காசைக் கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்னா, அது தர்மம் இல்ல..நாம கொடுத்த காசில தர்மம் நடந்தாத்தான் நல்லது. அதனால் நீயே முன்ன தர்மம் பண்றதுதான் ஒசத்தி.. ஒரு இன்வால்வ்மென்ட் வேண்டாமோ.. காசு குடுத்துடறேன் அப்படின்னா போதுமா...நீயே செய்..நன்னா தர்மம் நடக்றதான்னு பாத்துப் பாத்து செய்" என்றார்கள்.அந்த நண்பர் இன்னும் செய்கிறார்.

அருள் மழை - 42 - மஹா பெரியவாள் - படித்ததில் மெய் சிலிர்த்தது


சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவாகாஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னுதகவல். றந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோடஅழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.


‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோடகுரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு,காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால,பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.


தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.


‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும்ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.
‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்றுபெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…


‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சிமகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.
பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள்திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவாஎன்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன். 

காலடியில் அவதரித்த கருணைப் பெருங்கடலே ...

அருள் மழை - 41 - மஹா பெரியவாள் - அம்பாளின் பல ரூபங்கள்

‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால்,எதையுமே தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ப்ரஹ்மம்.


இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்து விட்டன. ப்ரஹ்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க, உலகம், நக்ஷத்திரங்களிளிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற electron வரையில் எல்லாம் எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனசோ கேட்கவே வேண்டாம் – எப்போது பார்த்தாலும் அசைவுதான்! இத்தனை அறிவுகளும், அசைவுகளும், எப்படியோ பிரம்மத்தில் வந்து விட்ட மாதிரி இருக்கின்றன!
அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும், சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சர்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்!” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. யாமா – ஏது இல்லையோ, அதுவே – மாயா. நமக்கு மாயையை போக்குகிறவளும் அவள்தான்.

நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்.விசேஷமாகச் சில ரூபங்களில் த்யானித்தால் நம் மனசு லயிக்கிறது.எல்ல ரூபத்திற்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிரவளே பிராண சக்தியாக, மூச்சு காற்றாய் இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி, எல்லாம் அவள் வடிவம்தான்.இதையெல்லாம் அனுபவிக்கிற நம் மனசும் அவள்தான்.


‘மனஸ்த்வம்’ என்கிற ஸ்லோகத்தில் ஆச்சர்யாள் இதையெல்லாம் சொல்கிறார். வடக்கே ஹிமாச்சலத்தில் பர்வத ராஜகுமரையாகப் பிறந்தவள் தென்கோடியில் கண்யகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரியாகவும், தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமட்சியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜா பவானியாகவும், குஜாத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திர பிரதேசதத்தில் விந்த்யவாசினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதும் பல ரூபங்களில் கோயில் கொண்டு எப்போதும் அனுக்கிரகம் பண்ணி வருகிறவள் அவளே!

Friday, 20 April 2012

அருள் மழை - 40 - மஹா பெரியவாள் - எசையனூர் பாட்டி (Esayanur Patty)


காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.

எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.

“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.


“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.


“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.


காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.

பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.


ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.

“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.


சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்

Thursday, 19 April 2012

அருள் மழை - 39 - மஹா பெரியவாள் - கானல்நீர்!


பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ‘ஹா ஹா’ என்று தாஹம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது. ங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல்நீர் என்பது. ப்ரதிபிம்பம் (reflection), ஒளிச்சிதறல் (refraction) ‘தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் இலேசாகி விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும்.
இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும்,

ஸம்ஸ்க்ருதத்தில் ‘ம்ருக்’ என்றால் ‘தேடுவது’ என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் ‘ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது! லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ‘அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால், ‘கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா ? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்’ என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Saturday, 14 April 2012

அதிதி போஜன மகிமை - மஹா ஸ்வாமிகள்


பல
 வருடங்களுக்கு முன்புகாஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம்அன்று ஞாயிற்றுக் கிழமைதரிசனத்துக்கு ஏகக்கூட்டம்ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நக
ர்ந்தனர்ஒரு நடுத்தர வயதுத் ம்பதிஆச்சார்யாளை நமஸ்கரித்துழுந்துகை கூப்பி நின்றனர்

அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ஒரு வருஷத்துக்கு முன்னாலே வநதிருந்தே.அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் 

கொண்டேவினவினார்.


உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா.
நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி'
க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்சாப்பாடு போடஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே 
நடந்துண்டு வர்றது பெரியவா ! 


வயல்கள்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் றிச்சுப் போறதில்லைபிடிபடாம செலவாயிண்டிருந்த பணம்இப்போல்லாம் கைல தங்கறதுஎல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன் அதிதி போஜன மகிமை தான் 
பெரியவா....தினமும்செஞ்சுண்டிருக்கேன்வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். 

அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர்உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ்அதிதி போஜனம் பண்ணிவெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...து சரி.

இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் ண்ணி வெப்பா ?" என்றுகவலையுடன் விசாரித்தார்உடனே கோபாலனின் னைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான்பெரியவா வந்திருக்கோம்.  ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரமசந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும்

பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும்அதிதிக்கு உபசாரம் பண்றதுஅப்டி ஒரு அநுக்கிரகத்தைப்பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!

ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே திதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார்தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார்ஸ்வாமிகள்இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழகியூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்றுகொண்டனர்அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் 
ஆச்சார்யாள்பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

ஒரு பக்தர்ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"

உடனே ஸ்வாமிகள், "ஆமாமாமோக்ஷ்த்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய ர்மம் அது ! ரொம்பப் பேருக்கு னுகூலம்பண்ணி இருக்கு !  இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான்  சொல்லுவாஅப்பேற்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்றுஉருக்கத்துடன்  சொல்லி முடித்தார்.

ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை மஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேதுதிருவண்ணாமலை சொந்த ஊர்ஆச்சார்யாளைநாங் அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம்விஸ்தாரமா...நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம்பெரியவா கிருபை பணணணும் !" என்றார்


அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார்அனைவரும் மைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

"
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம்ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்)நிர்வாகம் பண்ணிண்டிருந்ததுஅப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா 
சொல்லப் போறேன்அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலேஇதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன்கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்

கும்பகோணத்து மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டுஅதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரிஒருத்தர் குடியிருந்தார்

நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோ தர்ம பத்தினி பேரு சிவகாமி ச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலேபள்ளத்துரச் சேர்ந்தவாஅந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கிடையாதுகடைத்தெரு மளிகைக் கடை பாத்துக்கறதுக்கு அவா 
ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வச்சிண்டுருந்தா.

குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பதுஅம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும்தா சர்வகாலமும் அவா ரெண்டு பேரோ வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும்வேற பேச்சேகெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துதுதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு 
 செட்டியாரே ஓட்டிண்டு போவார் !


நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்மமடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தாஅவாளப்பத்திஇதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன்பாருங்கோ..."


ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ?  அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றதுஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதிதினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும்அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சுபோஜனம் பண்ணி வெப்பா.   சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு,வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் க்காத்துவா.   அவா க்ருஹத்திலேமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் ந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா!   அதுலேயும்இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு 
கேட்டேள்னாவந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள்
தார்த்தங்கள்புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய்வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா !   அப்டி ஒரு ஒசந்த மனசுஇதெல்லாம்ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வே ஒரு ரகசியமும் இல்லேமடத்துக்கு ரொம்ப வேண்டியசுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோ கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார்அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதைஎல்லாம் ந்து சொல்லுவார்இப்ப புரிஞ்சுதா? " 

ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்ததுஉச்சி வேளைஒரு அதிதியக் கூடக் காணோம்கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப்படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார்.


அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார்அவரைப்பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார்


அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்குதேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார்கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரைஅழைச்சுண்டு போய் ஒக்கார 
வெச்சார் செட்டியார்சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி


செட்டியாரின் தர்ம பத்தினிசிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி 
புடிக்கும் ? சொல்லுங்கோகடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப்போட்டுடறேன்என்று கேட்டார்.  சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பககம் போய்ப் பார்த்தார்கொள்ளையிலேநிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார்உள்ளே ந்தார்.    'வேற ஒண்ணும் வேண்டாம்மொளக்கீ கூட்டும்கீரத் தண்டுசாம்பாரும் பண்ணாப் போறும்'னார்


கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார்
அப்போ மழையும் விட்டுடுத்துநாழி ஆயிண்டே போச்சுசிவனடியார்க்கோ நல்ல பசிகீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமாமுடியுமேங்கற எண்ணத்துலேதானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா.

பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டுதட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா.  ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினாரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா

அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானேஒரே பாத்திரத்துலேபோட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளேனு கொழம்பினார்.  சித்த நாழி கழிச்சுகீர வாணலிஇரணடையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மாசிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்குநிவேதனம் பண்ணினா.   இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! 


அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?'நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி.
அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டுநிவேதனம் பண்ணறானுதீர்மானிச்சுண்டுட்டார்.   இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம்பண்ணிண்டார்."

"போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந் சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த ஆச்சிகிட்டே 
கேட்டுட்டார்.

ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன்என் ர்த்தா 'சிவ..சிவனு சிவநாமத்தை சொல்லிண்டே பறிச்சார்அதுஅப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.   திரும்ப நிவேதிக்க வேண்டிய வசியம் இல்லேநீங்கஒண்ணுமே சொல்லாம பறிச்சேள்அதனாலே தான் னியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம்பண்ணினேன்னு சொன்னா

இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்துரொம்ப சங்கோஜப் பட்டுண்டார்தம்பதி ரெண்டு பேரும்சிவனடியாரை மஸ்காரம் பண்ணினாஆசீர்வாதம் ண்ணிப்டுஅந்த ஆச்சியோட பக்தியையும்புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப்புறப்பட்டார்அப்டி அன்னம் (சாப்பாடுபோட்ட ஒரு ம்பதி அவா..."
நிறுத்தினார் ஆச்சார்யாள்

பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்ததுஒருவரும் வாய் திறக்கவில்லை

ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படிவிடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்என்ன தெரியுமா ?
சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்திஎல்லாம் அவா பண்ணிண்டாஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணாவீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்குனுசொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா.  பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும்அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார்அவ்வளவு தான்.

அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய'-த்த அடஞ்சுட்டாஅதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்குஅந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவியப் பார்த்தேளா ?

இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..." முடித்தார் ஆச்சார்யாள்கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்ததுஇடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்குஎல்லோருக்கும் 
சிக்கும்போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோஎனக்கருணையுடன் அனுப்பி வைத்தது.


பக்தி என்பதுபண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாதுநாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல்சர்வசதா காலம் அவனிடம் ோய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாதுஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே தற்குத் தான் பக்தி என்று பெயர்.