Tuesday, 18 September 2012

பிராயச்சித்தம்




அன்று சித்திரா பவுர்ணமிதிருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ரஅபிஷேகம்பதினொருரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் பம் காலை 8 முதல் பிற்பகல் 2 வரை  பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார்நாராயணசுவாமி அய்யர்.  பெரியவா பக்தர்மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்கநமஸ்காரம் ண்ணி நின்றார்.  புருவத்தை உயர்த்தி பெரியவா "ன்ன விஷயம்?"என்றார்மிராசுதார் பவ்யமாக, தேங்காபழம்வில்வம் லைவிபுதி குங்குமம்சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"

"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு பண்ணினேன்அந்த பிரசாதம்."

பெரியவா தட்டை பார்த்தா.. "நாராயணசாமி நீ பணக்காரன்தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?"

"இல்லை பெரியவாநானே தான் பண்ணினேன்!" ("நானேகொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)

"லோக க்ஷேமத்துக்கு தானே?"

"அப்படின்னு இல்லைரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லேவெள்ளாமைபோரவில்லைகவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார்நல் விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன்பெரியவாளுக்கு அபிஷேகபிரசாதம் கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ...."  நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”

அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. - பெரியவா கண்ணைமூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியதுபிரசாதம் தொடப்படவில்லை.

"எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே ? "

"பதினொன்னு பெரியவா"

"யாராரு,  எங்கேருந்தேல்லாம் வநதா?" –

பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும்சிலையாக நின்று கவனித்தனர்.

 தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார் படித்தார் 

"திருவிடைமருதூர் வெங்கிட்டுசாஸ்திரிகள், ஸீனிவாச கனபாடிகள்ராஜகோபால ஸ்ரௌதிகள்......" பெரியவா இடைமறித்து:

"எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்களஆச்சே .. உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேசகனபாடிகள் பேர் இருக்கா பாரு?""

மிராச்தார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவாநேத்திக்கு அவரும் வந்தார்.

"பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவாவேதத்திலே அதாரிட்டிவயசு அதிகமிருக்குமே இபபோ.கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்லமுடியறதாமே"

துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :” " ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல முடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவுகொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று தோணித்து""

உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதைவேணுமானாலும் சொல்லாதே

தேப்பெருமாநல்லூர் வெங்கடேசகனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பததி உனக்கு தெரியுமா ? அவர் கால் தூசு சமானம்ஆவியா நீ?? பெரியவா கண் மூடிக்கொண்டது : 

நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறதுநான்கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு? கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது " வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்றுஅவரிடம் போய் கேட்டாயா?" அங்கிருந்த அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம்கேட்டுகொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடிகண்களில் பிரவாகத்தோடு "தப்புபண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோநடந்ததை தத்ரூபமாக சொல்றேள் "

"அது மட்டும் இல்லையேஎல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?

எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போ தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி " தலா பத்து ரூபா கொடுத்தேன்" “தெரியும்எல்லாருக்குமேவா? " மென்று முழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்தமிராச்தாரிடம் பெரியவா "எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோநானே சொல்றேன்எல்லாருக்கும் பத்து பத்துரூபா கொடுதுண்டேவந்து கனபாடிகள் கிட்ட வந்து சமபாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே

குறைச்சுமந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில் உனக்குசந்தோஷம்கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை வாங்கிண்டா அப்படி தானே ??"

நாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல் துடித்தார். "பெரியவா நான் திருந்திட்டேன்என்னை மன்னிக்கணும்"என்று வாய் புலம்பிக்கொண்டே இருந்ததுமடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும் அதிர்ச்சிபெரியவாளுக்குருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்ததுபெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும்தாக்கியதுகட்டி போட்டது

"அதோடு போச்சுன்னா பரவாயில்லையேராமச்சந்திர அய்யர் வீட்டில் அனைவருக்கும் போஜனம் நடந்ததேநீதானே சக்கரைபொங்கல் பரிமாறினே. நெய்திராட்சைமுந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும் திருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாமபோட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார்பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார் : "நானே சொல்றேன்நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினேகனபாடிகள் இன்னும்கொஞ்சம் போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலைகாதிலே விழாதது மாதிரி நகந்துட்டே.சரியாஇது பந்தி தர்மமாஅவர் மனசு நோகடிச்சு சந்தோஷபட்டே"". இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப துக்கம் மேலிட்டதுநாதழுதழுத்தது.

நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.

அமைதி பதினைந்து நிமிடம்பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். " தேப்பெருமாநல்லூர் வெங்கடேச னபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்பவர்இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லைஅவர் நாடி நரம்புமூச்செல்லாம் பரமேஸ்வரன்ரத்தம் பூரா ருத்ர ஜபம்ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம்மகா புருஷன்அவருக்கு நீ பண்ணினது மஹா பாவம்." மகாபெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலைநேரா திருவிடைமருதூர்கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார்கண்லே தாரை தாரையா நீர்வடிய "அப்பா ஜோதிமகாலிங்கம்நான் உன்னுடைய பக்தன்உன் சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத் ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கேஇப்போ எனக்கு 81ஆயிடுத்துமனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லேகுரல் போய்டுத்துசக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்றுவெட்கத்தை விட்டு அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன்முதல்லே அவர் காதிலே விழலை என்றுநினைச்சேன்அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு அதில் இஷ்டமில்லை என்றுஇவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு 
அடிமையாகிட்டேன்அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போஅவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம்.அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிஞை பண்றேன்இனிமே இந்த ன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டுமில்லைசக்கரை சேர்த் எந்த பண்டமும் இந்த கை தொடாது.”     கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.  நாராயணசாமிநீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை ஒத்துகொள்வாரா?"" மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.

மணி மூணு ஆயிடுத்துஅன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லைஎல்லார் கண்களிலும் இந்தி நதிகள்பித்து பிடித்ததுபோல்அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோபெரியவா தான் என்னை காப்பாத்தனும்”  என்று பெரியவா காலடியில்விழுந்தார்அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவில்லை. "

பெரியவா  “ எல்லாரும் இருங்கோ காலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்என்றார்எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65வயது மதிக்க தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன் வந்தார். "என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன்.   நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்ததுபெரியவாளுக்கு பிரசாதம் சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போகவந்தேன்என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்.. அவரை தடுத்து பெரியவா " சிவ தீக்ஷைவாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாதுஎன்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார்அனைவரும் பெற்றனர்.மடத்திலிருந்து அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டதுஅப்போது தான் அங்கு மிராசுதார் நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். " பெரியவாஇவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர்இவாதான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் ஏற்பாடு பண்ணினாஎன்று அவரையும்வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார்.  

நாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி கரைப்பேன்என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோஎன்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம் சொல் முடியும்தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள்மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்." " பெரியவா, நான் இப்பவே ஓடறேன். "அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாராஎன்ன பிராயச்சித்தம் ண்ணனும் என்று சொல்வாரா?" நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். " உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்என்று கூறிவிட்டு உளளே சென்று விட்டார்வெகு நேரமாகியும்பெரியவா வெளியே வரவில்லைமிராசுதார்  ஓடினார்அடுத் பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார்கனபாடிகள் காலில் விழுந்துபுரண்டு அழுது ன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம்அன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தைஅடைந்துவிட்டார் எனறு கூடியிருந்தவர்கள் சொன்னார்கள்மிராசுதார் ஐயோ என்று அலறினார்கனபாடிகள் உடல் இன்னும்அகற்றப்படவில்லைநல்லவேளைகனபாடிகளின் காலை பிடித்து என்னை மனனிச்சுடுங்கோ நான் மகாபாவிஎனறு கதறினார். "சுரீர்" என்றுஅப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்இருந்தால் என்று சொன்னாரா?????????.

*****   தன் பாபம் தீர நாராயணசுவாமி எண்ணற்ற மடங்களுக்கும் கோயிலுக்கும் தான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில்முக்தியடைந்தார் என்று கேள்வி.

Saturday, 15 September 2012

மகா பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன்



அதோ, போய்க்கொண்டு இருக்கிறார். - அர்த்தமுள்ள இந்து மதம், எட்டாம் பாகம் நிறைவு பகுதியில், கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

....இப்படிப்பட்ட யோகம் கை வந்த ஒருவர், காஞ்சி பெரியவர்.
அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார்.  இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.
கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி  இருக்கிறார்.  தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.

உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.  அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார்.  அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை. லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது.  மகா யோகம் மலர்கள் தூவுகிறது.  மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.

அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது. உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி.  அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் 'இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு 'ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல.  ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.

அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும்.  ஒரு உத்தமமான யோகியை 'பிராமணன்' என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார்.  அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை. அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே. அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்..

பெரியவரின் மகாத்மியம் !


திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! 

திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.
சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். 

இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி
இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக்கொண்டிருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.
அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். 

இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.
திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
"எந்திரு..சீதே...ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை.." என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். 

முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர்
க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!
பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! 

பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின்
ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல்!
"பெரியவா......இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு.....கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!" என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
"ராமா!.....ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா...போ!"
"உத்தரவு பெரியவா......" அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். 

பிறகு, "ராமா.....இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு......அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்.....அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்" என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.

பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்.....!!!!!!

அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! "கணேசன்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.
இப்போதும் நடுக்காவிரியில் "காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி" கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். 

Thursday, 23 August 2012

‘யார் துறவி? எது துறவு?’- WHO IS A SANYAASI - MAHAA PERIYAVAA'S EXPLANATION - PRACTICAL EXPLANATION



‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் ...

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.

ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.
...
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார் துறவி – எது துறவு" என்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.
இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…!’

Sunday, 19 August 2012

வேத சப்த மஹிமை – பரமாசார்யாளின் எளிமையான விளக்கம்


நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ‘என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.
நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, “நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்” என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்.
அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ‘இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்” என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. “ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?” என்றான் அந்த பிராம்மணன்.
நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். “அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?” என்று. “அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது” என்றான் பிராம்மணன்.
“அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன்(reaction) ஏற்படுத்துமானால் , வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில்(atmosphere) எத்தகய உயர்ந்த ரியாக்ஷன்(reaction) ஏற்படுத்தும் என்பது தங்களுக்கு காலையில் ஞாபகமில்லை போலிருக்கு” என்று சொன்னார்.
சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!
அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்த்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும் , அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் “தெய்வீகம்” என்பதற்கு லக்ஷணம்.
அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?

Friday, 3 August 2012

அஞ்செழுத்து அஸ்திவாரம் - "சிவாயநம'"




ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.

பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.  



நாரதரும் அப்படியே கேட்டார்.


இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. 


அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.



பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.



நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.



பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.


""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.



""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.



நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! 


ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், 


""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை. ""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.



நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.



அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.



பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.
  

சி - சிவனைக் குறிக்கும்
வா - அருளைக் குறிக்கும்
ய - ஆன்மாவைக் குறிக்கும்
ந - திரோதத்தைக் குறிக்கும்
ம - மலமாயைக் குறிக்கும்.

Thursday, 2 August 2012