Tuesday, 9 October 2012

நீ எங்கு இல்லை விட்டலா?


பண்டரிபுர  பாண்டுரங்க விட்டலன்  நாமதேவுக்கு  குழந்தை பருவத்திலிருந்தே  தன் அருளை  நிறைய 
அளித்திருந்ததால்,  நாமதேவுக்கு  விட்டலன் எப்போதும்  தன்னுடைய  இதயத்திலேயே  இருப்பதில் ரொம்ப   ஸ்பெஷல்  பெருமையும்,   கொஞ்சம்  கர்வமும்  கூட!!

நாம்தேவ் கொஞ்சம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், ஒரு குருவிடம் அணுகி திருந்தவேண்டும்” என்று பண்டரிநாதன்  சங்கல்பித்தான்

இந்த சமயத்தில்தான் மண் பாண்டம் செய்யும் குயவராயிருந்தும், பாண்டுரங்க  பக்த சிரோமணியான கோராகும்பர் தன்னுடைய  கிராமத்தில் மஹா ஸ்ரேஷ்டர்களை எல்லாம் அழைத்து விருந்து  வைக்க தீர்மானித்தார்மகான் ஞானேஸ்வர் கோராகும்பரிடம்  "எல்லா பானைகளையும் தட்டி பாருங்கள். முழுதும் வெந்திருக்கிறதா என்று தட்டி பாருங்கள்"  என  கட்டளையிட்டார்கோரா கும்பர்  அங்கு வந்திருந்த         பக்தர்களை வரிசையாக உட்காரவைத்து தன் கை தடியால்  ஒவ்வொருவர் தலையிலும் தட்டி கொண்டே வந்தார்அனைவரும் அமைதியாக அதை ஏற்றுகொண்டனர்

நாம்தேவ்  அந்த கூட்டத்தில்  இருந்தார். னால் தன் தலையில்  தடியால் தட்ட இடம் கொடுக்கவில்லைஞானதேவர் முதல் அனைவரும் ஒன்று சேர்ந்து “ இந்த  பானை  சரியான  பக்குவம் அடையாமல் அரை குறையாகதான் வெந்திருக்கு” என்று  வருந்தினர். மிகுந்த மன விசனத்துடன் நாம்தேவ் பண்டரிபுரம்  திரும்பி விட்டலனிடம் முறையிட்டார்.

விட்டலனும் "நாம்தேவ் நீ உண்மையிலேயே ஞானம் அடையவில்லைஎனவே தான் ஞானிகளின் செயலை உன்னால்  புரிந்துகொள்ள இயலவில்லைநீ  ஒன்று செய்நேராக ஊருக்கு  வெளியே இருக்கும் சிவன் கோயிலில் "விடோபாகேஷரா" என்று  ஒருவர்  இருக்கிறார்அவரை போய்  பார், என்றான்

நாம்தேவ் ஓடினார்சிவன் கோயிலுள் நுழைந்தபோது ஒரு  கிழவர்   படுத்துக்கொண்டு தன் கால்களை சிவலிங்கம் மேல் போட்டு கொண்டு படுத்திருப்பதை கண்டார்ரொம்ப  கோவம்  வந்துவிட்டது  நாமதேவுக்கு.  

கண்மூடி படுத்திருந்த விடோபாவை கைதட்டி  எழுப்பினார்கண் திறந்து பார்த்த கிழவர்  "  !! நீதான்  விட்டல் அனுப்பிய அந்த  நாம்தேவா!!! என்று கேட்டார்., நாம்தேவ் அசந்து போய்,
"சுவாமி,  நீங்கள் ஒரு மகான் போல தோணுகிறதுஆனால், தாங்கள் ஏன் கால்களை சிவலிங்கத்தின் மேல் வைத்துகொண்டு இருக்கிறீர்கள் அபசாரம் அல்லவா"? எனக்காகவாவது  கால்களை  அப்புறபடுதுங்கள் என்றார்.

"அடேடே என் கால்களை சிவலிங்கம் மீதா வைத்திருந்தேன்அப்பனே என்னால் முடியவில்லையப்பா. கொஞ்சம் என் கால்களை எடுத்து வேறெங்காவது வையேன்”.என்றார். ஸ்ரத்தையோடு நாம்தேவ் கிழவர் கால்களை சிவலிங்கம் மேலிருந்து தூக்கி தரையில் வைத்தார். 

என்ன ஆச்சர்யம்!!!வைத்த இடத்திலும் காலின் கீழ்  சிவலிங்கம்.  வேறு இடம்வேறு  இடம்எங்கு வைத்தாலும் அங்கெல்லாமும்  கால் சிவலிங்கம் மேலேயே!!கடைசியில் தன் மடிமேலே  கால்களை வைத்து கொண்டார்  நாம்தேவ்.

தன் உடலில் மின்ன்னலைகள் பாய்ந்து உடலிலும்  உள்ளத்திலும் இறைவன் உட் புகுந்ததை அனுபவித்தார் நாம்தேவ்.

ஒரு  குருவை  அணுகி குருபக்தியோடு  அவர் கால்களுக்கு  பணிவிடை செய்த பலன் னக்கு இந்த ஞானானுபவம் என  உணர்ந்தார் நாம்தேவ் ."விடோபா" அவரை ஆசிர்வதித்து அனுப்பினார்ஊர் திரும்பிய நாம்தேவ் வீட்டிலேயே அடைந்து  கிடந்தார் விட்டல் தியானத்திலேயே காலம் கழித்தார்.

நாம்தேவ் ஏன் கோவிலுக்கு வருவதில்லை, தன்னை  பார்ப்பதில்லை என   பண்டரினாதனுக்கு  புன்சிரிப்பு  வந்தது.  நேரே நாம்தேவ் வீட்டுக்கு சென்றான்.  "ஏனப்பா நீ என்னை வந்து  பார்ப்பதில்லை” என விட்டல் கேட்டான்.

“விட்டலா!! இனியும் என்னை சோதிக்காதேதாங்க மாட்டேன்உன்னை நன்றாக புரிந்துகொள்ள செய்துவிட்டாய். என்கண்ணை  திறந்து விட்டாய். "நீ ஆலயத்தில் மட்டும்தான் உள்ளாயா?  நீ  எங்கு இல்லை ?  நீ இல்லா இடம் ஒன்றில்,நான் எங்கேயாவது  இருக்க முடியுமா. " என்றார் நாம்தேவ்.

விட்டலன்  மகிழ்ந்தான்...!!!

Monday, 8 October 2012

காயத்ரி மந்திரத்தின் சக்தி

உபநயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்றபொருளில் வரும். "உப" என்றால் அருகே என்றும் நயன என்பது அழைத்துச் செல்வது என்றும் பொருள் கொடுக்கும். இந்த உபநயனம் என்பது பூணூல் கல்யாணம் என அழைக்கப் பட்டு மிகச் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும் ஒரு விழாவாக மாறி விட்டது. அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு. ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர். எல்லாவற்றிலும் மாறிய நம் கலாசாரம் இதிலும் மாறிவிட்டது. வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள். இதில் 96 ழைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள். இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை. இந்தப் பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம். அப்படி ஜபித்து ஜபித்து உருஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம். இதை ஒரு படு சுவாரசியமான் சிறுகதை மூலம் பார்ப்போம்.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார். கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும். ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார். அவரும் திருமணமாகி ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்தார். 

என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை. அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும்
பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர். என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா? 

ஆம்; பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது  வந்துவிட்டது. அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.
ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே. என்ன செய்யலாம்? காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா? 

அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார். மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான். 

பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார். அவ்வளவு தானே! நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார். 

மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை
வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க…. ம்ஹும்.. அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை. 

பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன். மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு, அப்படியே பூணூல் இருக்கும் பக்கம்  தாழ்ந்தே இருக்க, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.

சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும். நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்து வரவும்.” எனக் கூறினார். கலக்கத்துடன் சென்றார் பிராமணர். 

இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது. மன்னன் பொருள் தருவானா மாட்டானா? ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்? அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ? அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா? குறைத்துவிடுவானோ? பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? 

பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை. காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலைச் செய்ய ஆரம்பித்தார். வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார். 

அரசவையில் மன்னன்,மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன். என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே? 

சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு,மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து  போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட. இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார். தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். 

வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது. அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்; அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை. 

ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.” என்றான் மன்னன்.

Wednesday, 3 October 2012

“அண்ணே ! ஏதோ சப்தம்…”


எங்கும் நிறைந்தருளும் பரப்பிரம்ம சொரூபம் என்பதை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாபெரியவாளேனும் மகேஸ்வரர் பல சமயங்களில் வெளிப்படுத்தி தன்னை லேசாக அடையாளம் காட்டியிருந்தாலும் மாயையால் நமக்கெல்லாம் அந்த ரகசியத்தை மறைப்பதையே தன் திருவிளையாடலாய் செய்துள்ளார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாபெரியவாளை தரிசனம் செய்ய ஒரு கிராமத்திலிருந்து முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். கிராமத்தில் விநாயகர்சிலை திருட்டு போய்விட்டது. அதனால் ஸ்ரீ பெரியவாளிடம் வந்து வேறொரு விக்னேஸ்வரர் சிலையை கேட்டு வங்கிக் கொண்டு போய் அக்கோயிலில் பிரதிஷ்டை செயலாமென்ற விருப்பத்தோடு வந்து நின்றார்கள். எல்லோரும் அப்படியே பிரார்த்தித்தார்கள்.


ஸ்ரீ பெரியவா அவர்களிடம் ” உங்க கிராமத்தில் ஏரி இருக்கா ? ” என்று சம்பந்தமில்லாமல் கேட்டார்.


ஒன்றும் புரியாத அவர்கள் ” இருக்குங்க ” என்றார்கள்.


” ஜலம் இருக்கா ? ” என்றார் ஸ்ரீ பெரியவா.


கிராமத்தார் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ” பஞ்சாயத்துலே தூர் வாரலே தண்ணி ரொம்ப கொஞ்சமா இருக்கு. ” என்றார்.


” ஏரியிலே நிறைய தண்ணீர் இருந்தா எல்லா ஜனங்களுக்கும் சௌகர்யம் ; கன்று காலிக்களுக்கும் உபயோகப்படுமில்லையா ? “


சகல ஜீவராசிகளிடம் அன்பு கொண்ட கருணை வடிவாய் ஸ்ரீபெரியவா கேட்டார்.


” ஆமாங்க ” என்றனர் கிராமத்து பெரியவர்கள்.


” முதல்லே ஏரியை ஆழப்படுத்துங்கோ ” என்று சொல்லி அவர்களுக்கு பிரசாதம் கொடுத்தார் ஸ்ரீ பெரியவா. அவர்கள் தயங்கி நின்றனர். ஆனால் பிரசாதம் கொடுத்துவிட்டால் ” போய் வாருங்கள் ” என்ற உத்தரவு ஆகிறதென்ற அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை.

இது தெரிந்தவுடன் அனைவருக்கும் ஏமாற்றம்.

விநாயகர் சிலை தற்சமயம் கைவசமில்லை என்று ஸ்ரீ பெரியவா சொல்லியிருந்தாலும் சற்று ஆறுதலாயிருக்குமே இப்படி தங்கள் கோரிக்கைக்கு முற்றிலும் சம்பந்தமேயில்லாத ஏதோ ஒரு கட்டளையை ஸ்ரீ பெரியவா கூறியனுப்பிவிட்டாரே என்ற ஆதங்கம் அவர்களிடம் வெளிப்பட்டது.


மேலும் ஏரியை ஆழப்படுத்துவது அரசாங்கத்தின் வேலை அதை ஏன் நம்மை செய்யச் சொல்லி இப்படி ஸ்ரீ பெரியவா உத்தரவிடவேண்டுமேன்ற கேள்வியும் அவர்கள் மனதில் எழுந்து குழப்பியது.


இது பெரிய விவாதமாகவே கிராம ஜனங்கள் மத்தியில் எழுந்து பிரச்சினையாகிவிட்டது. ஆனால் கிராமத்தின் சில முதியவர்கள் பெரியவங்க வாக்கு இது ! இதை செய்யலேன்னா குத்தமாயிடும். நமக்கு கஷ்டம் வரும் ” என்று பயந்தபடி அவ்வேலையை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானமாக கூறிவிட்டனர்.


கிராம மக்களுக்கு வேறு வழி இல்லாமல் போனது. இனியும் தாமதிக்கல்லாகாதென ஏரியை ஆழப்படுத்த ஆயத்தங்களை தொடங்கிவிட்டனர். குறிப்பிட்ட நாளில் மண்வெட்டியும், கடப்பாரையுமாக ஏரிக்குள் இறங்கி வேலையை ஆரம்பித்தனர்.


வேலையை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் ஒரு அதிசயம், கடப்பாரையில் ஏரியின் மண்ணை ஆழபடுத்திய ஒருவனுக்கு “டங்” கென்று சப்தம் கேட்டது.


” அண்ணே ! ஏதோ சப்தம் ” என்று மற்றவர்களை அவன் கூப்பிட்டான். மேலே தோண்டும் போது மிக ஜாக்கிரதையாக அந்த சப்தம் வந்த இடத்தை துழவினார்கள்.ஆகா ! அவர்கள் எதிர்பார்த்த புதையல் !


அங்கே ஒரு பிள்ளையார் நல்ல வேலையாக சிதிலப்படாமல் உட்கார்ந்திருந்தார். அவர் பழமைவாய்ந்த பிள்ளயாராய் காட்சி தந்தார். இருக்கும் இடத்தைவிட்டு எங்கேயோபோய் தேடி அலைந்தீர்களே, நீங்கள் தேடிச் சென்று என்னை யாசித்தவர் எல்லாமுமறிந்த ஞானேஸ்வரர் அல்லவா ! அவருக்கு ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு ஏரியில் நான் புதைந்திருப்பேன். என்பதை எப்படி அறியமுடிந்தது. என்று நீங்கள் அதிசயப்பீர்கள். ஆனால் அவர் ஏன் தந்தையாய் சாட்சாத் ஈஸ்வரரல்லவா நீங்கள் சரியானவரிடம்தான் போய் என் சிலையை கேட்டு நின்றிருக்கிறீர்கள் என்று அந்த பிள்ளையார் சிலை அவர்களை பார்த்து கேட்பது போல மண்ணிலிருந்து எழுந்தருளினார்.


உற்சாகமும் மகிழ்ச்சியுமாக ஜனங்கள் ஸ்ரீ பெரியவாளின் அருளை நினைத்தபடி தங்கள் வேலையை தொடர்ந்தனர். பிள்ளையாரை காட்டும் வழியாக தங்களுக்கு ஏரியை தூர் வாரும் பொதுப்பணியை மேற்கொள்ள சொல்லி மகான் உத்தரவிட்டுள்ளார் போலும் என்று அந்த சேவையில் முழு மனதோடு ஈடுபட்டு தொடர்ந்தபோது அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு இடத்தில் ” டங் ” கென்று சப்தத்துடன் ஏதோ எச்சரித்தது.


மெதுவாக மண்ணை வாரியபோது அங்கே சிவலிங்கம் ஒன்று அருள்பொழிய வெளிப்பட்டது. அதிசயம் தொடர்ந்தது அருகருகே நந்தி, அம்பாள், முருகன், பலிபீடம், துர்கை என அத்தனை தெய்வச்சிலைகளும் தென்பட்டன. பெரும் குதூகலத்தோடு சாட்சாத் நடமாடும் தெய்வத்திடம் இதை சொல்ல கிராமம்திரண்டு காஞ்சிபுரம் வந்தது.


பக்திபெருக “சாமிகிட்டே ஒரு பிள்ளையார் சிலைதான் கேட்டோம். இப்போ ஒரு கோயிலே கிடைச்சிருக்கு என்று ஆனந்தமுற்றனர்.


“ஏறிக்கரையிலே ஒரு கீற்றுகொட்டகை போட்டு சிலைகளை வெச்சு, விளக்கேற்றி, பழங்கள் நிவேதனம் செஞ்சுட்டு வாங்க என்று எல்லாமுமறிந்த தெய்வம் உத்தரவிட்டனுப்பினார்.


” கோயில் கட்டணுமே ” என்று கிராமமக்கள் ஆதங்கப்பட்டு கேட்டனர்.


“பிள்ளையார் வந்துட்டாரே ! அவர் பார்த்துப்பார் என்று மாயையை விரித்து,


அவர்களிடமிருந்து தான் ஈஸ்வரர் என்பதை மறைக்கும் எத்தனத்தில் விடைகொடுத்தனுப்பினார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா !

வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்’ -மகா பெரியவா

மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட, வசதிமிக்க கல்கத்தா சேட்ஜி ஒருவருக்கு தீராத ஒரு நோய். எந்த உணவையும் சாப்பிட பிடிக்கலை. எதை சாப்பிட்டாலும், அதன் ருசி தெரியாமல், உப்பு சப்பில்லாமல் இருந்தன. தாகம் கூட எடுப்பது இல்லை. அதனால், நாளடைவில் மிகவும் மெலிந்து போனார். பார்க்காத வைத்தியம் இல்லை. இறுதியில் யாரோ சொல்லக்கேட்டு, மகாபெரியவரை போய் சந்தித்தார். விவரம் கூறினார். பெரியவா ஒரு விஷயம்  சொன்னார். பரிகாரம் போல் இருந்தது.

அந்த கல்கத்தா சேட்ஜிக்கு, மகா பெரியவா சொன்ன பரிகாரம் என்பது மேலோட்டமாக பார்த்திட ஒரு பெரிய விஷயம்போல தெரியாது. ஆனால், நடைமுறையில் அதைச் செய்திட உண்மையில் இறையருள் நிறையவே வேண்டும்.
நம் மதத்தின் தனிப்பெரும் சிறப்புக்குரியவை, முதலில் வேதங்களே! அதைத் தொடர்ந்து இந்த மண்ணில் வந்தவை இதிகாச புராணங்கள். இதிகாசங்கள் என்றாலே, ராமாயணமும், மகாபாரதமும் வந்துவிடும்.

புராணம் என்று வரும்போது ஒரு பட்டியலே உள்ளது. அந்த வகையில், ‘பிரம்ம புராணம், பத்மபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்’ என்று பதினெட்டு புராணங்களோடு வாயு புராணத்தையும் சேர்த்தால், 19 புராணங்கள் வருகிறது.

பெரியவர் அந்த சேட்ஜிக்கு சொன்ன பரிகாரம் இதுதான். மேலே கண்டவற்றில், நான்கு வேதங்கள் மற்றும் இரண்டு இதிகாசங்களையும் விட்டுவிட்டு, மீதமுள்ள அவ்வளவு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் பிசகின்றி, நூலாக அச்சிட்டு அதை இந்த பாரததேசம் முழுக்க உள்ள வேத பண்டிதர்களுக்கும், விரும்பிக் கேட்பவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். சேட்ஜியால் செய்ய முடியுமா? என்று கேட்டார். சேட்ஜியே உப்புச் சப்பில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்தபடி இருக்கிறார். எனவே, மறுபேச்சே பேசாமல் அந்த பரிகாரத்துக்கு தயாராகிவிட்டார்.

ஆனால், பதினெட்டு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் மாறாமல், அச்சிட வேண்டும் என்று பெரியவர் அடிக்கோடிட்டு விட்டபடியால், அதை தேடிக்கண்டுபிடிப்தே ஒரு பாடாக இருந்தது. அதற்காக ஒரு அலுவலகம் அமைந்து, அதில் வேத பண்டிதர் களை நியமித்து, அவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் தந்து, ஒரு அர சியல் கட்சித் தலைவர் ஒரு இயக்கத்தை நடத்துவதுபோலவே நடத்த வேண்டி யிருந்தது.

தோராயமாக சில லட்ச ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்ட விஷயம், பல லட்சங்களை விழுங்கியது. ஒவ்வொரு புராணத்தையும் தேடிப்பிடித்து அச்சேற்றி புரூஃப் திருத்தி, பின் உரிய முறையில் புத்தகமாக்கி, அதை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அடுத்த புராணம் என்று செயல்பட வேண்டியிருந்தது.

இவ்வாறு செய்வதால், அவருக்கு குணமாகிவிடும் என்கிற உறுதியை பெரியவர் தரவில்லை. சொல்லப் போனால், இந்த பரிகாரத்தைக்கூட, எடுத்த எடுப்பில் கூறிவிடவில்லை. ஒருமுறைக்கு பலமுறை அந்த சேட்ஜி சார்பில் ராஜகோபால சர்மா என்னும் உபன்யாச சிரோன்மணி ஒருவர், முயற்சி செய்தபிறகே அவர் கூறியிருந்தார். இதைக் கூற காரணம் உண்டு.

ஒரு நம்பிக்கை அடிப்படையில், பெரியவர் சொன்னதை செய்ய, அதைவிட கூடுதலான நம்பிக்கை செய்பவரிடம் வேண்டும். அடுத்து அந்த நம்பிக்கை துளியும் குறையாதபடி நீடிக்கவும் வேண்டும். ஏனென்றால், பெரியவர் சொன்ன இந்த பரிகாரப்படி பதினேழு புராணங்களைத் தேடிப்பிடித்து, அச்சேற்றிவிட்ட நிலையில், பதினெட்டு ஒன்றே பாக்கி என்றிருக்கும் நிலையில், அந்த சேட்ஜியிடம் எந்த குணப்பாடும் இல்லை. சொல்லப்போனால் குணமாவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் படவில்லை.

ஆனால், பணமோ கரைந்தபடி உள்ளது. சொல்லப்போனால், சேட்ஜி சம்பாதித்ததை எல்லாம் கரைத்துவிட்டார் என்று கூட கூறலாம்தான். ஆனால், சேட்ஜியோ துளியும் நம்பிக்கை குன்றாமல் பதினெட்டாவதையும் வெளியிட்டு முடித்தார். பதினெட்டாவதாக ஸ்ரீஸ்கந்த புராணத்தை அச்சடிக்கத் தொடங்கும்போதே அவரிடம் ஒரு மாற்றம். தாகம் எடுக்க ஆரம்பித்தது. அச்சடித்து முடிக்கும்போது சாப்பிடவே தொடங்கிவிட்டார். நாக்குக்கு ருசி உணர்வு வந்து, அவரது மர்மநோய் இனி என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல நீங்கியேவிட்டது.
சேட்ஜியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு, அவர் பெரியவரை எப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்திருப்பார் என்று கூறத் தேவையே இல்லை. இந்த விஷயத்தில் பெரியவர் சொன்ன பதில்தான் சிகரம்.

‘இந்த அதிசயத்தை நான் செய்யவில்லை. அப்படிச் சொன்னால் தவறு. பதினெட்டு புராணங்களுக்குள்ளம் சப்த ரூபமாய் வாழ்ந்துகொண்டிருககும் நம் ரிஷிகளும் முனிவர்களும் இறை அம்சங்களுமே இதைச் செய்தன. சேட்ஜியின் கர்ம வினைக்கு இணையான பரிகாரமாக, நான் இதை எண்ணிடக் காரணம் கூட, நமது ரிஷிகளும் முனிவர்களுமே…’ என்று, அவருக்கு வந்த வந்தனங்களை எல்லாம், அப்படியே ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் சமர்ப்பணமாகும்படி செய்துவிட்டார்.

இதை அறிந்தபோது, எனக்குள் பெரும் நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. ‘விதியை மதியாலெல்லாம் வெல்ல முடியாது என்பது உண்மையாயினும், அந்த மதிக்குள் விதியை ஏற்றுக்கொள்ளும் தெளிவை, திட சித்தியை நாம் பெற்றாலே கூட போதுமே.’ அதுதான் பகவான் ரமணரின் அனுபவம். வலியை விரும்பு – வலியே வலிமை போன்றவை… இவ் வேளையில், சிறு வயதில் நான் பார்க்க என் அத்தை ஒரு நோட்டில், ‘சாதுஜன ப்ரியா ஸ்ரீராமா – ராமராஜ்ய விட்டலா ஜெயராமா. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் – ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்…’ என்று எழுதிய ஸ்லோகங்கள் நினைவுக்கு வருகின்றன.

அத்தையின் இல்வாழ்க்கை தொடக்கம், அத்தனை இனியதாயில்லை. கர்மத்தைவிட வேறு எதை காரணமாக கூற முடியும்? மருந்தாக அத்தை எடுத்துக் கொண்டது அந்த ஸ்லோகத்தைத்தான். அத்தை, இன்று பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த ஸ்லோகம் அத்தையின் கர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் குறைத்தது.

நான் பார்க்க பலர் ஸ்ரீராமஜெயம் எழுதக் காண்கிறேன். சிவபுராணம், ஹனுமன் சாலீசா என்று சிறு சிறு புத்தகங்களை அச்சிட்டு, அனைவருக்கும் கொடுக்கக் காண்கிறேன் – எல்லாவற்றுக்கும் மூலம் பெரியவர் சொன்ன இந்த பரிகாரமே!

உலக மருத்துவர்களெல்லா கை விட்டுவிட்ட வியாதிக்கே, மருந்தாக நமது அறநூல்கள் இருக்கிறதென்றால், இதை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தில் உழல்வதும் இதை அறியாமல் இருப்பதும் எத்தனை அறியாமை?

ஒன்றை மட்டும் இமயத்தின் உச்சியில் நின்றுகொண்டு சொல்வதுபோல் சொல்வேன். மந்திரங்களால் நிரம்பியிருக்கும் மனங்களுக்கு பெரிய துன்பம் வரவே வராது. ‘நான் சொல்லவா… ஒரு பெரிய கனபாடிகள் புற்றுநோயால் அவதிப்படுவதை…’ என்று உடனே வரிந்துகட்டிக் கொண்டு பதில் சொன்னால், அவர்களுக்கு எனது பதில் இதுதான்:

ஒரு புத்தகத்தை வாங்குவது, வீட்டு அலமாரியில் வைப்பதற்காக அல்ல. வாசிப்பதற்காக! அதேபோல மந்திரங்களை நாம் அன்றாடம் கூறுவது என்பதும் வாய்ப்பாட்டு ஒப்பிப்பதுபோல் இருக்கக்கூடாது. துளியாவது அதன் பொருளை உணர்ந்துகொண்டு, உருக்கத்தோடு சொல்ல வேண்டும். அதே போல ராமஜெயம் என்று எழுதும்போது, ராம காவியம் மனத்துக்குள் ஓட வேண்டும். ஹனுமனின் சாகசங்களை நம் சாகசம்போல லயித்து அனுபவிக்கவேண்டும். 
திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்வதும் எழுதுவதும் எந்த வகை பக்தி? மாறிக் கொண்டேயிருக்கும் உலகில், மாறாதது மாற்றம் ஒன்றே என்றும், உலகில் அந்த திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரு மந்திரம் அல்லது ஒரு சப்தத்தால் என்ன பெரிதாக ஏற்பட்டு விடும் என்று, அறிவுபூர்வமாக உணர்ச்சி பூர்வமாக கேட்பதில் உள்ள வேகத்தை அடக்கி, மனத்தை அதன் போக்குக்குப் போய்விடாதபடி, வளைத்துத் திருப்பி திரும்பத் திரும்பச் சொல்; திரும்பத் திரும்ப எழுது என்றும் இந்த அற்புதத்துக்குள் சிரமப்பட்டு முயல வேண்டும்.

நல்ல விதியமைப்பு கொஞ்சமாவது இருந்தாலே, இதில் நம்பிக்கை ஏற்படும். கோயிலுக்கு செல்வதை நித்ய பரிகாரம் என்று சான்றோர்கள் கூறுவார்கள். பசுவுக்கு அகத்திக் கீரை தருவதை சிறந்த பரிகாரம் என்பார்கள். ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு உதவுவதை, பசி என்று நம் காதுபட கூறுபவர்களுக்கு அன்னமிடுவதை, தாகம் என்று தவிப்பவர்களுக்கு தண்ணீர் தருவதை அன்றாட பரிகாரங்கள் என்பார்கள்.

இவற்றுக்கு நடுவில், இறை நாமங்களை ஜபிப்பது, எழுதுவது என்பதெல்லாம் விளக்கை பளிச்சென்று துலக்க முற்படுவது போன்றது. நான் இம்மட்டில் ஒரு நாளைக்கு 108 என்ற கணக்கெடுத்து இறை நாமத்தை எழுதி வருகிறேன். அழுத்தமாய் கர்மம் கரைவதையும் உணர்கிறேன். அதே சமயம், அது வேண்டும் இது வேண்டும் என்கிற ஆசைகளோடெல்லாம் இதை செய்வதில்லை. அப்படி ஆசைப்பட்டாலே, இந்தச் செயல்பாட்டை நாம் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பல் துலக்குவது, குளிப்பதுபோல இதை ஒரு நித்ய கடமையாக முதலில் செய்ய வேண்டும். பின் நெகிழ்வோடு செய்ய வேண்டும். நெகிழ்வோடு செய்திட லயிப்பு மிக முக்கியம். ஸ்ரீராமஜயம் எழுத எழுத அது காலப்போக்கில் தானா ஏற்பட்டது. 

இந்த நாமம் குறித்து மட்டுமல்ல; புராணங்கள் குறித்தும், பெரியவர் கூறும் கருத்தும் மனத்துக்குள் ஆழமாய்ப் பதிவதாகவே உள்ளது.
‘மிகச்சிறிய ஒன்றை ஒரு பூதக்கண்ணாடி பெரியதாக காட்டுகிறது. அதுபோலவே, வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்’ என்று புராணங்களுக்கு அவர் விளக்கமளிக்கிறார். 
‘ஒன்றை சுருக்கமாகச் சொன்னால் அது மனத்தில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரமாகச் சொல்லும்போது, நன்றாக மனத்தில் பதியும்’ என்று புராணக்கதைகளின் நோக்கத்தை கூறுகிறார் பெரியவர்.

இதெல்லாமே அருமருந்து!
இந்த மருந்தை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தை எண்ணி எதற்குக் கலங்க வேண்டும்? எனக்கும் இப்போது விதி பயமெல்லாம் இல்லை. அதே சமயம் இந்தப் பரிகாரங்களை அல்லது பரிகாரத்தை உள்ளடக்கிய பக்திமயமான வாழ்வில், ராம நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ, ருத்ரத்தையோ விடாமல் ஜபித்து கர்ம சிரத்தையாக இருக்கும்போது, அதற்குப் பரிசாக தெய்வமும் வீடு தேடி வந்து, கருணை காட்டுகிறது