Thursday, 22 December 2011

அருள் மழை - 3 - மஹா பெரியவாள் - பென்ஷன்



1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன். பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்கை! என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாளை பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ளே பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான் " ஏம்பா! உங்களுக்கு எப்போப்பார்த்தாலும் பெரியவா சேவைதானா? நீங்க படிச்ச படிப்புக்கு, அப்போவே ஏதாவது சர்கார் உத்தியோகம் பார்த்துண்டு இருந்தா.........இப்போ பென்ஷனாவது வந்துண்டிருக்கும்......உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா?" என்றான்.

பஞ்சாபகேசன் பதறிப் போனார்!! "சிவ சிவா!!" அவருடைய உடல் ஒருமுறை நடுங்கியது. பேசக் கூட முடியலை. ....."பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ண குடுத்து வெச்சிருக்கணும்டா!......நேக்கு அந்த பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துலேயே இருந்து கைங்கர்யம் பண்ணினேன். நான் ஒண்ணு கேக்கறேன்.....அதுனால, நீங்கள்ளாம் என்ன கேட்டுப் போய்ட்டேள்? எல்லாரும் life ல நன்னாத்தானே இருக்கேள்? நமக்கெல்லாம் என்ன கொறை? சொல்லு.....இப்பிடி ஒரு குறையும் இல்லாமப் பாத்துக்கறதே என் பெரியவாதாண்டா........" ஆவேசமாகச் சொன்னார். 

"இல்லேப்பா.......சர்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குமேன்னு ஒரு ஆதங்கத்ல சொன்னேன்" பையன் பேச்சை முடித்தான்.
கொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாக காஞ்சிபுரம் போனான் மகன். வரிசையில் இவன் முறை வந்ததும், "நீ பஞ்சாபகேசன் புள்ளைதானே?" என்றார் பெரியவா.

"ஆமா........பெரியவா"

"ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா? என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுமோ? அவர நன்னா......வெச்சுக்கோ! என்ன செய்வியா? இந்த மடத்ல கைங்கர்யம் பண்ணறவாளுக்கெல்லாம் நெறைய பண்ணனும்னு எனக்கு ஆசைதான்......ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை. குடுக்கறவா என்ன குடுக்கறாளோ, அத வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு. இது "சர்க்கார்" ஆபீஸ் இல்லேல்லியோ? அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷியை ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்? ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்ல பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னு எனக்கு ஆசை.. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.....'பென்ஷன்'......னா!!" என்று முடித்தாரோ இல்லையோ, மகன் தடாலென்று பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.

"சர்வேஸ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே ஒழிய, அவரோட கைங்கர்யத்தைப் பத்தி நான் கொறையே சொல்லலை பெரியவா....என்னை மன்னிச்சுடுங்கோ!"
"ஒன்னை நான் கொறையே சொல்லலை........ப்பா ! என்னால பெருஸா எந்த ஒதவியும் பண்ணமுடியலை...ன்னுதான் இந்த சின்ன ஒத்தாசைக்கு வழி பண்ணினேன்"
அப்பா பண்ணிய சேவையை "போறும்" என்று கூறிய மகன், அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தார்!

பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்! எல்லாரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்............? எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு, ஸத்யம், சகல ஜீவதயை, பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.

Tuesday, 20 December 2011

அருள் மழை - 2 - மஹா பெரியவாள் - குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை

                                                                 

தீபாவளி தினம், ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான். 'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா.
"வேட்டி..." என்று இழுத்தான்,வண்டிக்காரன்.
பெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், "அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு வாங்கிக்கொடு" என்றார்கள்.
சிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை.
"சம்சாரத்துக்குப் பொடவை..."
அந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை. ஆனால், பெரியவாளோ," அவனுக்கு ஒரு புடைவை கொண்டு வந்து கொடு" என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள். சிஷ்யர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது.
பெரியவாள் தரிசனத்துக்காகப் பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஓர் அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே, சற்றுத் தொலைவில் ஒரு மறைவான இடத்துக்குச் சென்று,தான் கட்டிக் கொண்டிருந்த புதுப் புடைவையைக் களைந்து விட்டு,ஒரு பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வந்தார்.அந்தப் புதுப் புடைவையையும் சீட்டி ரவிக்கைத் துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.
பெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும். புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்துக்கு வந்தார்கள். "பெண்ணுக்குக் கல்யாணம்,..பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.."
"கல்யாணப் புடைவைகள், காஞ்சிபுரம் கடைத் தெருவிலே வாங்கினேளா?"
"ஆமாம்,..கூறைப் புடைவை, சம்பந்திக்குப் புடைவை, பந்துக்களுக்குப் புடைவைன்னு.. ஏகப்பட்ட புடைவைகள்..."
"பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடைவையிலே ஒரு புடைவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ?" தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது.பெரியவாளே கேட்கிறா..
உயர்ந்த புடைவை ஒன்றை பெரியவாள் திரு முன்னிலையில் சமர்ப்பித்தார்கள்.
தொண்டரைக் கூப்பிட்டு, "அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடைவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா...." என்றார்கள்,பெரியவாள்.
"தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்.
ஆமாம் அந்த அம்மையாரும்தான்!


அருள் மழை - 1 - மஹா பெரியவாள் - தினம் தினம் திருநாளே!

ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது. ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.
பரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.
மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்.
ஆனால், வேங்கடேச சாஸ்திரிக்குத் தமிழ் தெரியாது. சாஸ்திரிகள் பயணித்த அதே பெட்டியில் வைதீக ஆசாரத்துடன் கூடிய வேறு ஒருவரும் பயணித்தார். அவரைக் கண்டதும், ‘இவரும் இளையாற்றங்குடி மடத்துக் குத்தான் செல்கிறார் போலும்!’ என்று எண்ணிய வேங்கடேச சாஸ்திரி மெள்ள அவரை அணுகி, வட மொழி யில் பேச ஆரம்பித்தார்.
இளையாற்றங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தங்கியிருப் பது பற்றியும் பெரியவாளின் அழைப்பின் பேரில், தான் அங்கு செல்வதையும் விவரித்தார்.அத்துடன், ”தமிழ் மொழியோ… தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தாங்கள் உதவ வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அந்த வைதீக- ஆசார ஆசாமி, தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாகக் கூறியது டன், வேறு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். இதைக் கண்டு, மேலும் பேச்சை வளர்க்கவோ, தனக்கு உதவவோ அந்த ஆசாமிக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி.
இதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெயர்ப் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப் பதைப் படித்து, அந்தந்த ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி. திருமயம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு இறங்கிக் கொண்டவர், ஒருவழியாக இளையாற்றங்குடிக்கு வந்து சேர்ந்தார்.
ஸ்ரீமடத்துக்கு வந்த வேங்கடேச சாஸ்திரிக்கு அதிர்ச்சி! ரயிலில் பயணித்த அதே வைதீக- ஆசார ஆசாமியும் அங்கு இருந்தார். மடத்தில் இருந்தவர்களிடம் அந்த ஆசாமியைச் சுட்டிக்காட்டி வேங்கடேச சாஸ்திரி விசாரித்தபோது, ”இவர் ஸ்ரீமடத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்” என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி மிகவும் வேதனை அடைந் தார். ‘இவரிடம் பொன்- பொருளா கேட்டோம். வாய் மொழியாக ஒரு உதவிதானே கேட்டோம். மடத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கிறாரே!’ என்று வருந்தினார் வேங்கடேச சாஸ்திரி.
அவரின் முக வாட்டத்தைக் கண்டவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டனர். சாஸ்திரியும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மன வருத்தத்தோடு விவரித்தார். உடனே அங்கிருந்த ஒருவர், வேங்கடேச சாஸ்திரியை அழைத்துக் கொண்டு, நேரே மகா பெரியவாளிடம் சென்றார்.
அப்போது, மகா பெரியவாள் அங்குள்ள குளத்தில் இறங்கி நீராட தயாராகிக் கொண் டிருந்தார். அவருடன் மடத்து ஆட்களும் பக்தர்கள் பலரும் இருந்தனர். இவர் களைக் கண்டதும் ‘என்ன விஷயம்?’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவாள்.
‘இத்தனை பேர் இருக்கும்போது எப்படிச் சொல்வது’ என்று இரு வரும் தயங்கி நின்றனர். ஆனால் பெரியவா விடவில்லை. வந்த விஷயத்தைச் சொல்லும்படி வலியுறுத்தினார். வேறு வழி யின்றி, அனைத்தையும் விவரித் தார், சாஸ்திரியைக் கூட்டி வந்தவர்.
இதைக் கேட்டதும் மகா பெரியவாளின் முகம் மலர்ந்தது. ”புகார் புரிகிறது. நமது மடத்துக்கு நம் அழைப்பின் பேரில் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு, நமது மடத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவரே உதவ மறுத்துட்டார் என்பதுதானே வருத்தம்? இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய்? ஆனால், எனக்கு என்னவோ… அவரைப் போல நல்லவரே இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி நிறுத்தினார் மகா பெரியவாள்.
இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி, புகார் தெரிவித்த ஆசாமி உள்ளிட்ட அனைவரும் எதுவும் புரியாமல் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவரோ புன்னகைத்தபடி, ”வேறொண்ணுமில்லே… நம்ம பண்டிதரை (வேங்கடேச சாஸ்திரி) வேறு ஒரு ரயில் நிலையத்தில், ‘இதுதான் திருமயம்’ என்று இறக்கி விடாமல், ‘எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?” என்றார் மகா பெரியவாள்.
இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்க் கிற பக்குவத்தை எங்களுக்கும் அருளுங்கள்’ என்று வேண்டினர்.
இதுபோல நாமும், எல்லோரையும்- எல்லாவற்றையும்… நல்லவர்களாக- நல்லவை யாகவே பார்க்கக் கற்றுக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் இல்லையா...!!!



Tuesday, 13 December 2011

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்


நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம் (செப்ட ம்பர் 2009). டாக்டர்.இந்தர்சந்த்சுரானா

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதியங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன
அவைகளில் சில………
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த இரசா யனத்தை சாதார ணக்கருங்க ல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலா தாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவி னால் அந்தப் பறைகள் பெடி ப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச் சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதி ல்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையா னாலும் உலோகத்தை உருக் கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில் லை. எந்த கருங்கல் சிலை யை எடுத்துக்கொண்டாலும் சுர சுரப்பாக இருக்கும். ஆனா ல் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வே லைப்பாடுகள் எல் லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கி ன்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவ ங்கள், நாகா பரணங் கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இரு க்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன் கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள் ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷே கம் செய்கிறார்கள். ஆனால், அபி ஷேகம் முடிந்தவுடன் ஏழுமலை யானுக்கு வியர்க்கிறது. பீதாம் பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொ திக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1.திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரிய தாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வ டை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெள காரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந் திரிப்பருப்பு கேசரி போன்ற வை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டா து. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசே கரப்படியைத் தாண்டச் செல்லா து. ஆண்டவனுக்கு நைவேத்தி யம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற் றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொ ண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தே வஸ்தான அலுவலகத்தில் 12500  ரூபாய் செலுத்த வேண் டும்.வாரத்தில் ஒரு முறை வெ ள்ளிக் கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவத ற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டண மாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செ லுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வே ண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பி க்கும் சீர் வஸ் திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத் தப்படு கிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேக ம் செய்ய இன்று கட்டணம் செலுத்தி னால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வே ண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத் திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலி ருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம் பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பா ல் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகி றது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆ கும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படு த்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தி ல் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக் கோலம் , இலவங்கம், குங்கு மம், தமாலம், நிரியாசம் போ ன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலு க்காக அனுப்பப்படு கின்றன.
10. ஏழுமலையானின் நகைகளி ன் மதிப்பு ரூ.1000 கோடி, இவ ருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனா ல் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12கிலோ எடை. இதை சாத்து வதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக் கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கு ம் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிட மும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோ ழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைக ளையும், அறக்கட்டளைக ளையும் செய்து அவற்றை கல்வெட்டு களிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறு நில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெரு ந்தேவி நகைகளைத்தந்து, பூஜை க்கு அறக்கட்டளையும் வைத்தா ர். முதலாம் குலோத்துங்க சோ ழன் திருமலை தேடிவந்து காணி க்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத் தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற் சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமா னுக்கு வைரத்தில் விபூதி நெற்றி ப்படடை சாத்தப் பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப் பாக் கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்ம மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமா ன் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யா வும் சமகாலத்தவர் கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவ ரான முத்துசாமி தீட்சிதர் சிற ந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ் திரம் தெரிந்தவர், நூற் றுக் கணக்கான தெய்வங்கள் மீது பாடி யுள்ளார். ஏழும யைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள் ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழு மலையான் தனது மூன்றாவது கண் ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலு ம் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சி லையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர் களால், வெறுங்கைவேடன் என்று அழைக்கப் பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப் படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமி ட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரி வை ச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குண மடைய ஏழுமலையானை பிராத்தித்திரு கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப் பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தியிரு க்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட் டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கரு தி 1759 முதல் 1874 வரை எந்த ஆங் கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கி லப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பி னார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்க வில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங் கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜை கள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலை ப்பட்டார்கள்.
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர் ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியி ல் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளி ப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழ மை அபிஷேகத்திந்கு பரிமள அறை யில் வியாழன் இரவு அறைத்து தயா ர் செய்யப் படுகிறது. குங்குமப்பூ கல வையும் அபிஷேகத்திக்கு சேர்கப் படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வா சனை திரவியங்கள் பக்தர்கள் அனு ப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வார த்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாச னை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியி ல் கலக்கிறது. ஆகவே இது புனி தமான நீராகும். இங்கே குளித்து விட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழி பாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகா லை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ” வேங் கடமெனப்பெற்ற” என்ற பாசு ரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழு மலையான் திருமேனி யுடன் இருப்பார். முதலில் ஒரு தீபா ராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்க ப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்ப டும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப் படும். ஏழுமலையான் அந்த தீப ஒளி யில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப் பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயா ருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்ப வனின் தலைமையில் வந்த முஸ்லீம் படை களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள்இன்றை க்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக் கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழு மலை யானை கடவுளாக வழி பட்டு வாழ்த்தி வண ங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெ ட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் கால த்தவை. 169 கல் வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத் தவை. 229 கிருஷ்ண தேவராயர் கா லத்தவை. 251 அச்சுதராயர் கால த்தவை. 147 சதா சிவராயர் காலத் தவை. 135 கொ ண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்ல வர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுக ளில் 50 கல்வெட்டு க்கள் தான் தெலு ங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

Friday, 11 November 2011

காயத்ரீ மந்திரத்தின் மகிமை — காஞ்சி மஹா பெரியவாள்

சந்த்யாவந்தனமும் காயத்ரி ஜபமும் மிக முக்கியமானவை.

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராமணனாக மாட்டான்.  அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்கிரஹாரம் ஆகாது.  அது குடியானவர் தெருதான்.  ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராமணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்பிராமணன்;  கெட்டுப்போன பிராமணன்.  கெட்டாலும் பிராமணன்’ என்ற பேராவது இருக்கிறது.  மறுபடி பிராமணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டு விட்டால் பிராமணத்துவம் அடியோடு போய்விடுகிறது.  அவன் மறுபடியும் பிராமணனாக உறவுக்காரர்களாக உடையவன்.  அதாவது,  பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன் தான் !
ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும்.  சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது.  ஆனால் உபயோகப்படுமாறு  பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது  பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும்.  கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது.  இதுவரைக்கும் அனாசாரம் செய்ததற்குப் பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.  இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல்மந்திர சக்தி இருப்பதற்குத் தேகத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சஹஸ்ர பரமா தேவி சதா மத்யா தசாவரா‘  என்ற (தைத்ரீய ஆரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி உச்சரிப்பது உத்தமம்;  நூறு ஜபிப்பது மத்யமம்;  அதம பட்சம் பத்து.
காலை ஸந்திமத்தியான வேளை,  மாலை ஸந்தி என்று ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்துக் காலத்திலும் ஜபம் பண்ண வேண்டும்.  இந்த மூன்று காலங்களும்,  சாந்தம் உண்டாகிற காலம்.  காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம்.  அப்பொழுது மனது சாந்தியாக இருக்கும்.  சாயங்காலம் எல்லோரும் வேலையை முடித்து ஓய்ந்திருக்கும் காலம்.  அதுவும் சாந்தமான காலம்.  மத்தியான காலத்தில் சூரியன் உச்சியில் இருக்கிறான்.  அப்பொழுது மனத்துக்கு சாந்தமான காலம்.  இந்த மூன்று காலங்களிலும்,  காயத்ரீ,  ஸாவித்ரீ,  ஸரஸ்வதீ என்று மூன்று பிராகாரமாகத் தியானம் செய்ய வேண்டும்.  காலையில் பிரம்ம ரூபிணியாகவும்,  மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும்,  சாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்ய வேண்டும்.


காயத்ரீயில் சகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது.  மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான்.  அதை ஜபிக்கா விட்டால்,  வேறு மந்திர ஜபத்திற்குச்  சக்தி இல்லை.  ஹிப்னாடிசம் என்பதினால் பல காரியங்களைச் செய்கிறார்கள்.  மோக்ஷத்திற்குப்  போக உதவும் ஹிப்னாடிசம் காயத்ரீ மந்திரம் !  ஆசையையடக்கி  ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்னாடிசம் காயத்ரீ !  லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்ய வேண்டும்.  அனாசாரத்தில் போகாமல் தேகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.
சந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை.  மற்றவையெல்லாம் அதற்கு அங்கமானவை.  அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்து விட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும்.  ‘அந்த இரண்டு தானே முக்கியம் ?  அவற்றை மட்டும் செய்து விடலாம்’  என்றால் வரவர அவற்றுக்கும் லோபம் வந்துவிடும்.  ஆபத்திலும்,  அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால்அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும்அசக்தியுமாகத்தான் இருக்கும்’  என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார்.  ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றிச் செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும்.  ஆபத்துக் காலத்திலும்கூட அவற்றைச் செய்து வர வேண்டும்.  காலம் தப்பாமல் செய்ய வேண்டும்.  பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோது கூடத் தூளியை (புழுதியை) வைத்துக் கொண்டு காலம் தவறாமல் சேனா வீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
அஸ்தமன காலத்திலும்உதய காலத்துக்கு முன்பும்உச்சிக் காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும்.  இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார்.  சித்தர்கள் வினோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;  புதிராகப் பேசுவார்கள்.  இடைக்காட்டுச் சித்தர்  ஆடு மேய்த்தார்.  அவர்,  ‘காணாமல் கோணாமற் கண்டு கொடு !  ஆடுகாண் போகுது பார் போகுது பார் ! என்று சொல்லி இருக்கிறார்.  ‘காணாமல்‘ என்றால் காண்பதற்கு முன்பு என்று அர்த்தம்.  அதாவது சூரியோதயத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்க வேண்டும்.  ‘கோணாமல்‘  என்பதற்கு சூரியன் தலைக்கு மேலே இருக்கும்போது என்று அர்த்தம்.  அதாவது சூரியன் மேற்காகச் சாய்வதற்கு முன் உச்சிக் காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும்.   ‘கண்டு‘ என்பதற்கு சூரியன் இருக்கும்போது என்று அர்த்தம்.  சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலைவாயிலில் இருக்கும் பொழுதே சாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும்.  இந்த விஷயங்களைத் தான் அந்தச் சித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார்.   ‘ஆடு‘  என்றால் நீராடு !‘  அதாவது கங்கையில் ஸ்நானம் பண்ணு‘  என்பது அர்த்தம்.  ‘போகுது பார்‘ என்றால் த்ரிகால சந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தினாலும்சேது தரிசனத்தினாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார் !’ என்று அர்த்தம்.   காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டுசேதுவான ராமேஸ்வரத்துக்குப் போய் ராமநாத சுவாமிக்குக் கங்காபிஷேகம் பண்ணும் சம்பிரதாயத்தைத் தான் சொல்லியிருக்கிறார்!
காயத்ரீயைச் சரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் சித்தி உண்டாகும்.  அர்க்கியத்தையும்,  காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வர வேண்டும்.  ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்கா ஸ்நானமும்சேது தரிசனமும் பண்ண வேண்டும்.
ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால்,  கூட இருக்கிறவர்கள் அவனுக்காக சந்தியாவந்தனம்  பண்ணித் தீர்த்தத்தை  ஜ்வரம் வந்தவன் வாயில் விட வேண்டும்.  இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது.
ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்;  அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போகக் காயத்ரீ மருந்து அவசியமானது.  அதை எந்தக் காலத்திலும் விடக் கூடாது.  மருந்தை விட இதுதான் முக்கியமானது.  ஒரு நாளாவாது சந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிய காரியம்தான்.  இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம்.  சரீரப் பிரயாசையும் இல்லை.  லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம்.  ஆயுள் இருக்கிற வரைக்கும் சந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ண வேண்டும்.
காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய் வடிவமாக) உபாசிக்க வேண்டும்.  பகவான் பல வித ரூபங்களில் வந்து பக்தர்களுக்குக் கிருபை செய்கிறார்.  நம்மிடம் எல்லாரையும் விட அன்பாக இருப்பது மாதா தான்.  தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயம் இல்லாமல் சொல்லலாம்.  பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது.  காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.
பல வித மந்திரங்கள் இருக்கின்றன,  அவற்றை ஜபம் பண்ணுவதற்கு முன்பு,  இன்ன இன்ன பலனை உத்தேசித்துப் பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம்.  காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்தி தான்;  மன மாசு அகலுவதுதான்.  மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாகத் தான் இருக்கின்றன.  அதுவே காயத்ரீக்கு நேரான பலன்;  ஒரே பலன்.
இந்தக் காலத்தில் காலையிலும்சாயங்காலத்திலும் எல்லாரும் காலந் தவறாமல் சந்தியாவந்தனம் செய்யலாம்.  சீக்கிரம் ஆஃபீசுக்குப் போக வேண்டியவர்கள் மத்தியான வேளையில் வீட்டிலிருக்க முடியாதாகையால்,  பிராதஃகாலம்  ஆனபின் அதாவது சூரியோதயத்திலிருந்து ஆறு நாழிகை ( 2  மணி 24 நிமிஷம்)  கழித்து வரும் சங்கவ காலத்தில்,  அதாவது 8 .30  மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக  அர்க்கியத்தைக்  கொடுத்து ஜபிக்க வேண்டும்.
அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றித் திரிகால சந்தியோபாஸனை  இல்லாமல் இருக்கவே கூடாது.  அடியோடு முடியாமல் ஜுரம் வந்தால் மற்றவர்களிடம்,  ‘கஞ்சி கொடு,  தீர்த்தம் கொடு’  என்று சொல்லுவதைப் போல,  ‘எனக்காக சந்தியாவந்தனம் பண்ணு’  என்று சொல்ல வேண்டும்.
மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவானை எல்லோரும் பிரார்த்திப்போமாக!

Saturday, 29 October 2011

குறையொன்றுமில்லை



எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத M.S. ன் குறையொன்றுமில்லை கீதம்.....

http://www.youtube.com/watch?v=N4eN1nrohkE&feature=youtu.be

Saturday, 3 September 2011

Amazing parrot - Spare two minutes if u can to share my sorrow...!!

The name RITU brought me so much of pleasure and kindness within me which has now turned to a guilt of murder within me..





U know what it is..?? RITU is our pet parrot. It has not been even half a year over since Ritu was brought to our home from my friend's house which was gifted to me by them(Mr.Bala and his wife Shobi). When it came to our home it was too small to have its own food. We used to feed it and it grew in our care. It played with us so sweetly, brought within us peace and relief when we were tensed. Whenever i was in  temper it swiftly cooled me like a snow with its graceful looks and affectionate chirp. It used to climb upon all those people who went near to it. We used to feed it with all those we eat like food, vegetables, fruits, snacks and sweets and many lots.


Whenever we returned home from outside it greeted us with its cute chirping sound. It was so affectionate that it will recognise its name when we call it and rushes towards us to climb upon us swiftly. From kid it was brought up in such a way that it didnt even recognise that it was a bird and could fly...It had feathers but still climbed using its beak to catch every then and there supports it had.


It was not put in a cage as is the usual scenario of a parrot but was kept in a open basket with a heap of clothes making its bed. It used to sit on the basket kept near the window. It always played on the grills and screen of the window by climbing up and down. But...RITU is now no more...


Yesterday evening it went out of the grill of the window which was opened and was caught by a cat. Its all because of my daughter who had kept window wide open and slept on the bed. No one were at home that time except her. She didnt expect a cat to come there and all those things that happened. Ritu playfully went out and died. She didnt even hear the crying sound of it. I found as soon as i returned home that RITU is missing since i found the usual welcome sound of RITU missing as well as it didnt come to me when i called. My heart beat increased to its maximum. When my daughter woke up it was too late for her to recognise what has happened.


We got to see only few feathers of it lying on the floor and it was as if my heart was shattered into bloody pieces.


We still called RITU when we had breakfast this morning. It didnt come. We then realized that there is now no more RITU, no more its graceful and pleasant chirps.
It was a companion for us for the past few months. Whenever we were in tears it consoled us with its own language. Now it left us in tears with its memory that comes upon seeing that window where it lived and its bed made into that basket and all those photos in our mobile.


We MISS U RITU...! But you will keep living in our hearts forever..!!


This note is written in memory of my sweet RITU and is dedicated to it..May its soul reach heaven..!!