Sunday, 25 December 2011

அருள் மழை -5 - மஹா பெரியவாள் - மகான் - முதல்வர் எம் ஜி ஆர் சந்திப்பில்


திரு பிச்சாண்டி  I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி.

காஞ்சி  மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள் நடப்பதுண்டு திரு எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது அவருடைய நேர்முக உதவியாளராக திரு பிச்சாண்டி இருந்தார்.


முதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை . திரு எம் ஜி ஆருக்கு ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் "இதயம் பேசுகிறது " திரு மணியன் அவர்கள் . முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் , திரு மணியன் அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .

முதல்வர் அவரது துணைவியார் மணியன் மூவரும் புறப்பட ஆயத்தமானார்கள் ஆன்மீக விஷயமானதால் திரு பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்ல தயங்கினார் ஆனால் முதல்வர் விடவில்லை தனது உதவியாளர் எந்த சந்தர்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அவரையும் உடன் அழைத்து சென்றார் .

ஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிட்டபட்டது மகானுக்கு சற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதி அளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .
மகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்

செயலாளர் பிச்சாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால் நின்றிருந்தார்  , இதை கவனித முதல்வர் அவரை சைகை கட்டி அருகே வருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர் அழைத்ததால்தான் செல்கின்றேன் என்று கூறி முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .

மகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள் பி ஏ வா என்று கேட்க , முதல்வர் அமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன் வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார். பிறகு முதல்வர் மகானை பார்த்து  "உங்கள் தேகம் எப்படி இருக்கிறது?"  என்று கேட்டார்.

"தேகம்" என்று அவர் கேட்டது , "தேசம்" என்று மகான் செவிகளில் ஒலிக்க
தேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்


முதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்
"தங்களது தேகம் எப்படி இருக்கின்றது" என்று முதல்வர் கேட்கிறார்
அதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாக புன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல மருந்தே சாப்பிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான் சொல்லணும் என்றார்.

உடனே முதல்வல் சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்? மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம் பேசவில்லை


"எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்" என்றார்


"சொல்லுங்கள் செய்கிறேன் " முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார்


"முதல் விஷயம்  - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறது இல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பட்டு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார்


இரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கு அதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்".
"செய்துவிடுகிறேன் "


மூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்


முதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்தவண்ணம் இருக்கிறார்
"நாகசாமியை மன்னிச்சுருங்கோ " என்கிறார் ,


(நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாகவேண்டும்) .
பழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை , நேரடியாக பத்திரிகைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார் . பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொள்வார் .
முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்ம் . அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் , இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் , அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும் இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித மகான் பேசினார்

" நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்ளவோ விஷயங்களை நாட்டுக்காக தெர்யப்படுதி இருக்கார் , அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய் இருக்கும்   "மன்னித்து விடுகின்றேன் " என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார்

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்பட்டன , தனது உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் வேறு விஷயங்களை பற்றி எவ்வளவு கவலைப்படுகின்றார் என்று வியந்தார் முதல்வர்.

No comments:

Post a Comment