Saturday, 18 February 2012

அருள் மழை - 14 - மஹா பெரியவாள் - மருத்துவர் (Supreme Doctor Periyavah - Cured Cancer.)



இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். ஈச்சங்குடி கணேசயர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோ ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சோல்லிவிட்டார்கள்.


பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார்,
கணேசயர்... ‘


ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாக்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சோல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.
அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது. (துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போய்விட்டது)"
- ஸ்ரீ மடம் பாலு

No comments:

Post a Comment