Monday, 27 February 2012

அருள் மழை - 18 - மஹா பெரியவாள் - சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள்



காஞ்சிசங்கரமடத்திற்கு சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் பெரியவரிடம் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழைச் சமர்ப்பித்து வணங்கினர்.

அழைப்பிதழில் ஒரு வரி விடாமல் அனைத்துப் பக்கங்களையும் படித்து முடித்த பெரியவ சர்ம கஷாயம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று கேட்க, யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

“”அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேனஎன்று மீண்டும் கேட்டார் பெரியவர்.

புலவர் வெங்கடேசன் என்ற பக்தர்,”"சர்ம கஷாயம் என்பது சமஸ்கிருதச் சொல் என்று மட்டும் தெரிகிறது. ஆனால், எனக்கு அதன் பொருள் தெரியவில்ல என்றசொல்லி முடித்தார். உடனே பெரியவரே சர்மகஷாயத்திற்கு விளக்கம் தர முன் வந்தார்.

“சர்ம கஷாயம் என்பது சமஸ்கிருதச் சொல் தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம் போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்து இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில் வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள்,” என்று அருமையான விளக்கம் அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment