Thursday, 5 July 2012

“உம்மாச்சி” என்கிற வார்த்தை எப்படி வந்தது - மஹா பெரியவா


"எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும்மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும்மஹாவிஷ்ணுஉலகைப் பரிபாலிப்பவர்காலையில் உலக காரியங்களைத் தொடங்கும்முன் அவரை ஸ்மரிக்க வேண்டும்பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒங்குகின்றனமாலையில் நம் வேலைகள் ஒய்கின்றனநாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறதுபட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றனஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலிக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றனவெளியில் திரியும் எண்ணங்களை யெல்லாம் அப்போது இதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும்தோஷம் என்றால் இரவுஇரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ரதோஷம்பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.

ஈஸ்வரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும்ஈசுவரன் சிவன் எனப்படுகிறார்அம்பாளுக்கு சிவா என்று பெயர்.

வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறதுபயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ல்வரூபம் உண்டுஅதற்கு சிவா என்று பெயர்அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது


ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவேருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான்அம்மாஉன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரி யில் கேட்கிறார்.


அப்படிப்பட்ட  சிவனோடு சிவாவையும் சேர்த்துச் சொன்னது மட்டுமல்லநம் தேசக்குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றனநம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல்நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.

குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன?குழந்தைகள் ஸ்வாமியை உம்மாச்சி என்றே சொல்லும்குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டுஇவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டிருக்கின்றனபெரியவர்களின் வார்த்தைகளும்அவற்றின் அர்த்தங்களும் மாறும்குழந்தைமொழி மாறுவதில்லைஉம்மாச்சி என்ற குழந்தை மொழிக்கு ஸ்வாமி என்று அர்த்தம்


என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூடஉம்மாச்சித்தாத்தாவுக்கு நமஸ்காரம் செய் என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்இதென்ன உம்மாச்சிஇதன் சரியான மூலம் என்ன?என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன்அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரிராஜபுரம்வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள்அவர்களில் ஒருவரை ஒருவர் உம்மாச்சி என்று கூப்பிடுவதைக் கேட்டேன்திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேஸ்வரன் என்பதுஎனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்ததுஉம்மாச்சுஉம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன்ஆககுழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.


குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம்குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லைஇந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த வினாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும்இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஒடி ஒட்டிக் கொள்ளும்குழந்தைக்கு மோச எண்ணம் இல்லைகபடம் இல்லைஇதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் குழந்தையாக இரு என்று உபதேசிக்கின்றனகுழந்தையே தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால்அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும்வேத்ததின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல்எல்லோரும் சாங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!
நம:பார்வதீ பதயே:ஹர ஹர மஹாதேவா! "

No comments:

Post a Comment