Thursday, 29 December 2011

மகா பெரியவா மணலில் போட்ட அட்சதை


மகா பெரியவா திருவடியே போற்றி 

 வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.     எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது. ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர். வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார். உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள். ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும். மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது. தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார். வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” - மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே? மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை. மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். “ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார். இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவாவஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்? 

அருள் மழை - 7 - மஹா பெரியவாள் - கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ


புதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்திரத்தில் தங்கியிருந்தா பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு " அப்பா நாகு! நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ!" என்றார்.
"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா" என்றான் பவ்யமாக.
நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே "மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னா இருக்காதுங்கறதால....."ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லறேன்னு சொல்லறியாக்கும்? சரி அப்பிடியே பண்ணு"
ராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை! அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை! அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா "பூணூல்" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச்! அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்? என்ன பண்ணுவது?
நேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான். சரியாக மணி 3 . 30 ! கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் "விஸ்வரூப" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம்!! ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான்! ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.
நான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான்! "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது! தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான்! எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம் தந்தான் அந்த பரமேஸ்வரன்!!!
மிகுந்த வாத்சல்யத்துடன் "கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடா........ப்பா! அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு! பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ?" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை! இவனுக்கோ ஒரே ஆச்சர்யம்! வாட்சைப் பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்!!
மறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம். தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனை எழுப்பினார். மணி சரியாக மூணரை!!ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகு! அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். " என்னடா....நாகு! நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே!! என்ன தெரியணும்? கேளு..."
"அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா..........."
"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார்? அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே!......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே? இல்லியா பின்னே?"
"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரை மணி....ன்னு சரியா எப்டி பெரியவா.........."
அவன் முடிப்பதற்குள் "ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து "மணி மூணரை " ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு?" கடகடவென்று சிரித்தார்.
"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னு எங்..காதுல வந்து சொன்னது "பஸ்". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்காரோட டி.வி.எஸ் பஸ்!! ஆச்சர்யப்படாதே!! மொத நாள் சரியா மூணரைக்கு நீ "ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர" சொல்லி எழுப்பினேல்லியோ?.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு! அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் ! மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான்! மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன்! நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு!" பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.
ஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...... ஏனென்றால், பெரியவா என்றாலே பேரறிவுதானே!! P for "Perfection " - என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம்! நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்கிரகம் பண்ண பிரார்த்திப்போம்.

Tuesday, 27 December 2011

அருள் மழை - 6 - மஹா பெரியவாள் - மது அருந்தியவன் மனிதனா

 க்ஷே த்திரங்கள் பலவற்றுக்கும் சென்று, அங்கு உறைந்திருக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும்; புண்ணிய நதிகளில்- தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. மகாமகம், கும்பமேளா போன்ற புண்ணிய காலங்களில் லட்சக்கணக் கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவதை இன்றைக்கும் காணலாம்! புண்ணிய நதிகளில் நீராடினால்… பாவங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி பெருகும்!

‘கடலைக் காண்பதே விசேஷம். இதைப் பார்ப்பதே புண்ணியத்தைத் தரும்’ என்பர். ஆனால், சாதாரண நாளில், கடலில் நீராடக் கூடாது. ஆடி மற்றும் தை அமாவாசை, கிரகணம், மாசி மகம் போன்ற புண்ணிய காலங்களில் மட்டுமே கடலில் நீராடலாம். ஆனால் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் உள்ள கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் பெறலாம்.

காஞ்சி மகா பெரியவர், தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஆடி அமாவாசை புண்ணிய காலம் நெருங்குவதையட்டி, வேதாரண்யத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார் பெரியவாள்! அதற்கு தக்கபடி தனது யாத்திரையை அமைத்துக் கொண்டார் ஸ்வாமிகள். ஸ்ரீராமபிரான், காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு வார்த்தையையும் பேச மாட்டார்; செயல்பட மாட்டார் என்பர். மகான்களும் அப்படித்தான்… வெட்டிப் பேச்சுகளும் வீண் செயல்களும் அவர்களிடம் இருக்காது!

யாத்திரையின்போது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத் தங்கி, பூஜைகளை முடித்துக் கொண்டு பிறகு பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தபோது, அங்கு பசியால் வாடிய நிலையில், ஒருவர் வந்தார்.

அவரைக் கண்டதும் மடத்து மேனேஜரை அழைத்த ஸ்வாமிகள், ”இவருக்கு ஆகாரம் கொடு; அப்படியே நல்ல வேஷ்டி- துண்டும் கொடு” என்றார். மேனேஜரும் அப்படியே செய்தார்.

பிறகு பெரியவாளிடம் வந்து, ”தங்களின் உத்தரவுப்படி உணவும் உடையும் கொடுத்தாச்சு. அவரை அனுப்பிடலாமா?” என்று கேட்டார்.

உடனே பெரியவாள், ”மடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ… அதேபோல இவரையும் கவனியுங்கள்; ராஜோபசாரம் செய்யுங் கள்” என்றார்.

மேனேஜருக்குக் குழப்பம்! இருப்பினும் பெரியவாளின் உத்தரவுப்படி, யாத்திரையில் புதிய நபரும் உடன் வந்தார்.

தினமும் மேனேஜரிடம், ‘அவருக்கு சாதம் போட்டாயா?’, ‘அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா?’ என்று விசாரித்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிகள்.

நாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீரென மது அருந்தி விட்டு வந்தார். கடவுளைத் திட்டினார்; மடத்து ஊழியர்களைக் கண்டபடி ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உடை தந்து ஆதரித்த பெரியவாளையும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.

இதைக் கண்டு பொறுமை இழந்த மேனேஜர், ஓடோடி வந்து, பெரியவாளிடம் விவரம் முழுவதும் சொன்னார். ‘இந்த ஆசாமியை அனுப்பி விடுங்கள்’ என்று வேண்டினார்.

இதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பெரியவாள். இம்மியளவு கூட அந்த ஆசாமி மீது கோபமே வரவில்லை ஸ்வாமிகளுக்கு!

”ஸ்வாமி! அந்த ஆசாமியை அனுப்பிடட்டுமா?” என்று மீண்டும் கேட்டார் மேனேஜர். ஆனால், பெரியவாள் மறுத்துவிட்டார்.

ஆடி அமாவாசை! இந்த நாளில் காஞ்சி மகா பெரியவாள், வேதாரண்யத்தில் சமுத்திர ஸ்நானம் செய்யப் போகிறார் எனும் தகவல் அறிந்து சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேதாரண்யத்துக்கு வந்து சேர்ந்தனர்.

ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம்; அதிலும் காஞ்சி மகானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங் கூட்டமாக கடற் கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகளும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்!

ஸ்வாமிகள் கடற்கரைக்கு வந்தார்; அவரை அனைவரும் நமஸ்கரித்தனர்; நீராடுவதற்காக கடலில் இறங்கினார் பெரியவாள்! அவரைத் தொடர்ந்து மூதாட்டிகள் உட்பட எண்ணற்ற பக்தர்கள் பலரும் தபதபவென கடலில் இறங்கினர்.

அவ்வளவுதான்! மூதாட்டிகள் சிலரை அலை இழுத்துச் செல்ல… பலரும் செய்வதறியாமல் தவித்து மருகினர்.

அப்போது… ஆரவார அலைகளைப் பொருட் படுத்தாமல் பாய்ந்து சென்று, மூதாட்டிகளை இழுத்து வந்து, கரையில் சேர்த்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல… பெரியவாள் உட்பட அனைவரையும் மது போதையில் ஏசினானே… அந்த ஆசாமிதான்!

இவற்றைக் கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். மகான்கள் தீர்க்கதரிசிகள்!

அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
மகான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே!

மகாபெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Sunday, 25 December 2011

அருள் மழை -5 - மஹா பெரியவாள் - மகான் - முதல்வர் எம் ஜி ஆர் சந்திப்பில்


திரு பிச்சாண்டி  I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி.

காஞ்சி  மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள் நடப்பதுண்டு திரு எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது அவருடைய நேர்முக உதவியாளராக திரு பிச்சாண்டி இருந்தார்.


முதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை . திரு எம் ஜி ஆருக்கு ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் "இதயம் பேசுகிறது " திரு மணியன் அவர்கள் . முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் , திரு மணியன் அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .

முதல்வர் அவரது துணைவியார் மணியன் மூவரும் புறப்பட ஆயத்தமானார்கள் ஆன்மீக விஷயமானதால் திரு பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்ல தயங்கினார் ஆனால் முதல்வர் விடவில்லை தனது உதவியாளர் எந்த சந்தர்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அவரையும் உடன் அழைத்து சென்றார் .

ஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிட்டபட்டது மகானுக்கு சற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதி அளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .
மகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்

செயலாளர் பிச்சாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால் நின்றிருந்தார்  , இதை கவனித முதல்வர் அவரை சைகை கட்டி அருகே வருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர் அழைத்ததால்தான் செல்கின்றேன் என்று கூறி முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .

மகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள் பி ஏ வா என்று கேட்க , முதல்வர் அமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன் வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார். பிறகு முதல்வர் மகானை பார்த்து  "உங்கள் தேகம் எப்படி இருக்கிறது?"  என்று கேட்டார்.

"தேகம்" என்று அவர் கேட்டது , "தேசம்" என்று மகான் செவிகளில் ஒலிக்க
தேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்


முதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்
"தங்களது தேகம் எப்படி இருக்கின்றது" என்று முதல்வர் கேட்கிறார்
அதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாக புன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல மருந்தே சாப்பிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான் சொல்லணும் என்றார்.

உடனே முதல்வல் சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்? மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம் பேசவில்லை


"எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்" என்றார்


"சொல்லுங்கள் செய்கிறேன் " முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார்


"முதல் விஷயம்  - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறது இல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பட்டு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார்


இரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கு அதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்".
"செய்துவிடுகிறேன் "


மூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்


முதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்தவண்ணம் இருக்கிறார்
"நாகசாமியை மன்னிச்சுருங்கோ " என்கிறார் ,


(நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாகவேண்டும்) .
பழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை , நேரடியாக பத்திரிகைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார் . பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொள்வார் .
முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்ம் . அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் , இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் , அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும் இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித மகான் பேசினார்

" நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்ளவோ விஷயங்களை நாட்டுக்காக தெர்யப்படுதி இருக்கார் , அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய் இருக்கும்   "மன்னித்து விடுகின்றேன் " என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார்

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்பட்டன , தனது உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் வேறு விஷயங்களை பற்றி எவ்வளவு கவலைப்படுகின்றார் என்று வியந்தார் முதல்வர்.

Friday, 23 December 2011

அருள் மழை - 4 - மஹா பெரியவாள் - உபநயனம்



  


திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.
மகா சுவாமிகளிடம் அபார பக்தி.
பெரியவாள் 


எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார்.
மின்னல் வேக தரிசனம் இல்லை.ஓரிரு நாள்கள் தங்கி பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து
விட்டுத்தான் போவார்.


"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்"
என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார்,ஒரு முறை. "செய்யேன்..."
"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..." பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள். "உன்னோட....பையன்தானே?"

இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார்
சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை
விட்டு விட்டு தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.கிராமத்தில்
குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?"
"நாங்கள் குழந்தையை எடுதுண்டு வந்தோம்.ஊர்,பெயர்,
பந்து, ஜனங்கள் தெரியலை,திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."


பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.
அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், "பாரு....
ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து,
பூணூல் போடப் போறார்!என்ன மனஸ்,இவருக்கு.." கண்ணன் சொன்னார்:"அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருந்தோம்!"


பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு
சொன்னார்கள்"


"கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன். அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே.உன் பையன்தான்." பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.

Thursday, 22 December 2011

அருள் மழை - 3 - மஹா பெரியவாள் - பென்ஷன்



1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன். பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்கை! என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாளை பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ளே பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான் " ஏம்பா! உங்களுக்கு எப்போப்பார்த்தாலும் பெரியவா சேவைதானா? நீங்க படிச்ச படிப்புக்கு, அப்போவே ஏதாவது சர்கார் உத்தியோகம் பார்த்துண்டு இருந்தா.........இப்போ பென்ஷனாவது வந்துண்டிருக்கும்......உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா?" என்றான்.

பஞ்சாபகேசன் பதறிப் போனார்!! "சிவ சிவா!!" அவருடைய உடல் ஒருமுறை நடுங்கியது. பேசக் கூட முடியலை. ....."பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ண குடுத்து வெச்சிருக்கணும்டா!......நேக்கு அந்த பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துலேயே இருந்து கைங்கர்யம் பண்ணினேன். நான் ஒண்ணு கேக்கறேன்.....அதுனால, நீங்கள்ளாம் என்ன கேட்டுப் போய்ட்டேள்? எல்லாரும் life ல நன்னாத்தானே இருக்கேள்? நமக்கெல்லாம் என்ன கொறை? சொல்லு.....இப்பிடி ஒரு குறையும் இல்லாமப் பாத்துக்கறதே என் பெரியவாதாண்டா........" ஆவேசமாகச் சொன்னார். 

"இல்லேப்பா.......சர்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குமேன்னு ஒரு ஆதங்கத்ல சொன்னேன்" பையன் பேச்சை முடித்தான்.
கொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாக காஞ்சிபுரம் போனான் மகன். வரிசையில் இவன் முறை வந்ததும், "நீ பஞ்சாபகேசன் புள்ளைதானே?" என்றார் பெரியவா.

"ஆமா........பெரியவா"

"ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா? என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுமோ? அவர நன்னா......வெச்சுக்கோ! என்ன செய்வியா? இந்த மடத்ல கைங்கர்யம் பண்ணறவாளுக்கெல்லாம் நெறைய பண்ணனும்னு எனக்கு ஆசைதான்......ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை. குடுக்கறவா என்ன குடுக்கறாளோ, அத வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு. இது "சர்க்கார்" ஆபீஸ் இல்லேல்லியோ? அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷியை ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்? ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்ல பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னு எனக்கு ஆசை.. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.....'பென்ஷன்'......னா!!" என்று முடித்தாரோ இல்லையோ, மகன் தடாலென்று பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.

"சர்வேஸ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே ஒழிய, அவரோட கைங்கர்யத்தைப் பத்தி நான் கொறையே சொல்லலை பெரியவா....என்னை மன்னிச்சுடுங்கோ!"
"ஒன்னை நான் கொறையே சொல்லலை........ப்பா ! என்னால பெருஸா எந்த ஒதவியும் பண்ணமுடியலை...ன்னுதான் இந்த சின்ன ஒத்தாசைக்கு வழி பண்ணினேன்"
அப்பா பண்ணிய சேவையை "போறும்" என்று கூறிய மகன், அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தார்!

பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்! எல்லாரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்............? எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு, ஸத்யம், சகல ஜீவதயை, பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.

Tuesday, 20 December 2011

அருள் மழை - 2 - மஹா பெரியவாள் - குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை

                                                                 

தீபாவளி தினம், ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான். 'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா.
"வேட்டி..." என்று இழுத்தான்,வண்டிக்காரன்.
பெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், "அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு வாங்கிக்கொடு" என்றார்கள்.
சிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை.
"சம்சாரத்துக்குப் பொடவை..."
அந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை. ஆனால், பெரியவாளோ," அவனுக்கு ஒரு புடைவை கொண்டு வந்து கொடு" என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள். சிஷ்யர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது.
பெரியவாள் தரிசனத்துக்காகப் பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஓர் அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே, சற்றுத் தொலைவில் ஒரு மறைவான இடத்துக்குச் சென்று,தான் கட்டிக் கொண்டிருந்த புதுப் புடைவையைக் களைந்து விட்டு,ஒரு பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வந்தார்.அந்தப் புதுப் புடைவையையும் சீட்டி ரவிக்கைத் துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.
பெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும். புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்துக்கு வந்தார்கள். "பெண்ணுக்குக் கல்யாணம்,..பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.."
"கல்யாணப் புடைவைகள், காஞ்சிபுரம் கடைத் தெருவிலே வாங்கினேளா?"
"ஆமாம்,..கூறைப் புடைவை, சம்பந்திக்குப் புடைவை, பந்துக்களுக்குப் புடைவைன்னு.. ஏகப்பட்ட புடைவைகள்..."
"பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடைவையிலே ஒரு புடைவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ?" தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது.பெரியவாளே கேட்கிறா..
உயர்ந்த புடைவை ஒன்றை பெரியவாள் திரு முன்னிலையில் சமர்ப்பித்தார்கள்.
தொண்டரைக் கூப்பிட்டு, "அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடைவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா...." என்றார்கள்,பெரியவாள்.
"தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்.
ஆமாம் அந்த அம்மையாரும்தான்!


அருள் மழை - 1 - மஹா பெரியவாள் - தினம் தினம் திருநாளே!

ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது. ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.
பரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.
மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்.
ஆனால், வேங்கடேச சாஸ்திரிக்குத் தமிழ் தெரியாது. சாஸ்திரிகள் பயணித்த அதே பெட்டியில் வைதீக ஆசாரத்துடன் கூடிய வேறு ஒருவரும் பயணித்தார். அவரைக் கண்டதும், ‘இவரும் இளையாற்றங்குடி மடத்துக் குத்தான் செல்கிறார் போலும்!’ என்று எண்ணிய வேங்கடேச சாஸ்திரி மெள்ள அவரை அணுகி, வட மொழி யில் பேச ஆரம்பித்தார்.
இளையாற்றங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தங்கியிருப் பது பற்றியும் பெரியவாளின் அழைப்பின் பேரில், தான் அங்கு செல்வதையும் விவரித்தார்.அத்துடன், ”தமிழ் மொழியோ… தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தாங்கள் உதவ வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அந்த வைதீக- ஆசார ஆசாமி, தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாகக் கூறியது டன், வேறு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். இதைக் கண்டு, மேலும் பேச்சை வளர்க்கவோ, தனக்கு உதவவோ அந்த ஆசாமிக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி.
இதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெயர்ப் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப் பதைப் படித்து, அந்தந்த ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி. திருமயம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு இறங்கிக் கொண்டவர், ஒருவழியாக இளையாற்றங்குடிக்கு வந்து சேர்ந்தார்.
ஸ்ரீமடத்துக்கு வந்த வேங்கடேச சாஸ்திரிக்கு அதிர்ச்சி! ரயிலில் பயணித்த அதே வைதீக- ஆசார ஆசாமியும் அங்கு இருந்தார். மடத்தில் இருந்தவர்களிடம் அந்த ஆசாமியைச் சுட்டிக்காட்டி வேங்கடேச சாஸ்திரி விசாரித்தபோது, ”இவர் ஸ்ரீமடத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்” என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி மிகவும் வேதனை அடைந் தார். ‘இவரிடம் பொன்- பொருளா கேட்டோம். வாய் மொழியாக ஒரு உதவிதானே கேட்டோம். மடத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கிறாரே!’ என்று வருந்தினார் வேங்கடேச சாஸ்திரி.
அவரின் முக வாட்டத்தைக் கண்டவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டனர். சாஸ்திரியும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மன வருத்தத்தோடு விவரித்தார். உடனே அங்கிருந்த ஒருவர், வேங்கடேச சாஸ்திரியை அழைத்துக் கொண்டு, நேரே மகா பெரியவாளிடம் சென்றார்.
அப்போது, மகா பெரியவாள் அங்குள்ள குளத்தில் இறங்கி நீராட தயாராகிக் கொண் டிருந்தார். அவருடன் மடத்து ஆட்களும் பக்தர்கள் பலரும் இருந்தனர். இவர் களைக் கண்டதும் ‘என்ன விஷயம்?’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவாள்.
‘இத்தனை பேர் இருக்கும்போது எப்படிச் சொல்வது’ என்று இரு வரும் தயங்கி நின்றனர். ஆனால் பெரியவா விடவில்லை. வந்த விஷயத்தைச் சொல்லும்படி வலியுறுத்தினார். வேறு வழி யின்றி, அனைத்தையும் விவரித் தார், சாஸ்திரியைக் கூட்டி வந்தவர்.
இதைக் கேட்டதும் மகா பெரியவாளின் முகம் மலர்ந்தது. ”புகார் புரிகிறது. நமது மடத்துக்கு நம் அழைப்பின் பேரில் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு, நமது மடத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவரே உதவ மறுத்துட்டார் என்பதுதானே வருத்தம்? இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய்? ஆனால், எனக்கு என்னவோ… அவரைப் போல நல்லவரே இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி நிறுத்தினார் மகா பெரியவாள்.
இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி, புகார் தெரிவித்த ஆசாமி உள்ளிட்ட அனைவரும் எதுவும் புரியாமல் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவரோ புன்னகைத்தபடி, ”வேறொண்ணுமில்லே… நம்ம பண்டிதரை (வேங்கடேச சாஸ்திரி) வேறு ஒரு ரயில் நிலையத்தில், ‘இதுதான் திருமயம்’ என்று இறக்கி விடாமல், ‘எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?” என்றார் மகா பெரியவாள்.
இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்க் கிற பக்குவத்தை எங்களுக்கும் அருளுங்கள்’ என்று வேண்டினர்.
இதுபோல நாமும், எல்லோரையும்- எல்லாவற்றையும்… நல்லவர்களாக- நல்லவை யாகவே பார்க்கக் கற்றுக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் இல்லையா...!!!



Tuesday, 13 December 2011

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்


நன்றி: ஸ்ரீ ஆஞ்சநேயர் விஜயம் (செப்ட ம்பர் 2009). டாக்டர்.இந்தர்சந்த்சுரானா

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதியங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன
அவைகளில் சில………
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த இரசா யனத்தை சாதார ணக்கருங்க ல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலா தாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவி னால் அந்தப் பறைகள் பெடி ப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச் சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதி ல்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையா னாலும் உலோகத்தை உருக் கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில் லை. எந்த கருங்கல் சிலை யை எடுத்துக்கொண்டாலும் சுர சுரப்பாக இருக்கும். ஆனா ல் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வே லைப்பாடுகள் எல் லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கி ன்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவ ங்கள், நாகா பரணங் கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இரு க்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன் கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள் ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷே கம் செய்கிறார்கள். ஆனால், அபி ஷேகம் முடிந்தவுடன் ஏழுமலை யானுக்கு வியர்க்கிறது. பீதாம் பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொ திக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1.திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரிய தாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வ டை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெள காரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந் திரிப்பருப்பு கேசரி போன்ற வை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டா து. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசே கரப்படியைத் தாண்டச் செல்லா து. ஆண்டவனுக்கு நைவேத்தி யம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற் றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொ ண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தே வஸ்தான அலுவலகத்தில் 12500  ரூபாய் செலுத்த வேண் டும்.வாரத்தில் ஒரு முறை வெ ள்ளிக் கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவத ற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டண மாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செ லுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வே ண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பி க்கும் சீர் வஸ் திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத் தப்படு கிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேக ம் செய்ய இன்று கட்டணம் செலுத்தி னால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வே ண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத் திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலி ருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம் பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பா ல் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகி றது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆ கும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படு த்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தி ல் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக் கோலம் , இலவங்கம், குங்கு மம், தமாலம், நிரியாசம் போ ன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலு க்காக அனுப்பப்படு கின்றன.
10. ஏழுமலையானின் நகைகளி ன் மதிப்பு ரூ.1000 கோடி, இவ ருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனா ல் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12கிலோ எடை. இதை சாத்து வதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக் கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கு ம் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிட மும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.
12. மாமன்னர்களான இராசேந்திர சோ ழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைக ளையும், அறக்கட்டளைக ளையும் செய்து அவற்றை கல்வெட்டு களிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறு நில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெரு ந்தேவி நகைகளைத்தந்து, பூஜை க்கு அறக்கட்டளையும் வைத்தா ர். முதலாம் குலோத்துங்க சோ ழன் திருமலை தேடிவந்து காணி க்கைசெலுத்திஉள்ளார்.
14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத் தப்படுகிறது.
16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற் சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமா னுக்கு வைரத்தில் விபூதி நெற்றி ப்படடை சாத்தப் பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப் பாக் கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்ம மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமா ன் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யா வும் சமகாலத்தவர் கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவ ரான முத்துசாமி தீட்சிதர் சிற ந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ் திரம் தெரிந்தவர், நூற் றுக் கணக்கான தெய்வங்கள் மீது பாடி யுள்ளார். ஏழும யைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள் ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழு மலையான் தனது மூன்றாவது கண் ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலு ம் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சி லையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர் களால், வெறுங்கைவேடன் என்று அழைக்கப் பட்டார்.
20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப் படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமி ட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரி வை ச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குண மடைய ஏழுமலையானை பிராத்தித்திரு கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப் பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தியிரு க்கிறார்.
21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட் டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
22. திருமலையின் புனிதத்தன்மை கரு தி 1759 முதல் 1874 வரை எந்த ஆங் கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கி லப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பி னார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்க வில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங் கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜை கள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலை ப்பட்டார்கள்.
23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர் ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியி ல் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளி ப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழ மை அபிஷேகத்திந்கு பரிமள அறை யில் வியாழன் இரவு அறைத்து தயா ர் செய்யப் படுகிறது. குங்குமப்பூ கல வையும் அபிஷேகத்திக்கு சேர்கப் படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வா சனை திரவியங்கள் பக்தர்கள் அனு ப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வார த்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாச னை திரவியங்கள் வருகின்றன.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியி ல் கலக்கிறது. ஆகவே இது புனி தமான நீராகும். இங்கே குளித்து விட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழி பாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகா லை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ” வேங் கடமெனப்பெற்ற” என்ற பாசு ரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழு மலையான் திருமேனி யுடன் இருப்பார். முதலில் ஒரு தீபா ராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்க ப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்ப டும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப் படும். ஏழுமலையான் அந்த தீப ஒளி யில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப் பார்.
26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயா ருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்ப வனின் தலைமையில் வந்த முஸ்லீம் படை களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள்இன்றை க்கும் உள்ளன.
27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக் கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழு மலை யானை கடவுளாக வழி பட்டு வாழ்த்தி வண ங்கிணார்.
28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெ ட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் கால த்தவை. 169 கல் வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத் தவை. 229 கிருஷ்ண தேவராயர் கா லத்தவை. 251 அச்சுதராயர் கால த்தவை. 147 சதா சிவராயர் காலத் தவை. 135 கொ ண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்ல வர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுக ளில் 50 கல்வெட்டு க்கள் தான் தெலு ங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.