Wednesday 31 August 2011

சிவபெருமான் பற்றிய‌- கேள்விகளும் பதில்களும்


1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்…
காரைக்காலம்மையார்
3.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே'’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
குற்றாலம்
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
சங்கார  தாண்டவம்
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்…. 
களி.
(கண்டெடுத்ததை படைக்கிறோம்)

No comments:

Post a Comment