Friday 11 May 2012

அருள் மழை - 46 - மஹா பெரியவாள் - காதில் விழவே இல்லையா"?


தகவல் " காஞ்சி மகான் அருளிய அற்புத அனுபவங்கள் "  ரா வேங்கடசாமிகாஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை . தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை .
திரு ராஜகோபாலின் மனைவி கீதா பலவருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துகொண்டிருந்த சமயம் , மகானிடம் பெரும் பக்தி , அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் .

ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை ,  எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கசெய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கயக்கி விட்டது

மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை , இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமகிகொண்டு வர , ஒரு நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார் , அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும் பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு " இதனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள்" என்று கதறிக்கொண்டு இருக்கின்றேனே பெரியவா உங்கள் காதில் விழவே இல்லையா ,

காதில் விழவே இல்லையா என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது அங்கே சென்று கதவை திறந்தபோது " கஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம் மகா பெரியவா இந்த பிரசாதத்தை உங்களன்ண்ட கொடுக்க சொன்னார்" என்றனர் வந்தவர்

காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார் , கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை தான் தந்தையின் வாயில் ஊற்ற , அவரது மூச்சு திணறல் நின்றது , அதன் பிறகு அவர் தந்தை நீண்டநாள் சுகமாக வாழ்ந்தார் என்பது தான் வியப்பிற்குரிய விஷயம்
மகன் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார் "காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி

No comments:

Post a Comment