Monday, 23 July 2012

பெரியவாளும் - ரோஜா மாலையும்

 


பெரியவாளிடம் அத்யந்த  பக்தி கொண்டது  திரு நடராஜ சாஸ்த்ரிகள்  குடும்பம்அவர்  தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம்பெரியவா தஞ்சாவூரில் முகாம்பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும்  என்று கொள்ளை ஆசை
பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு

 குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லிபெரியவாளை தர்சனம்  பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார்.  

ஆனால்இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்மாலையோடு வீடு திரும்பினார்அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானேஇந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ.    பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள்.


 "இல்லேஇல்லேஅம்பாளும் பெரியவாளும் வேற வேற இல்லேதான்ஆனாலும்இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்ஆமாஇது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டுஅதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.


மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்பெரியவா மேலவீதி சங்கர மடத்தி லிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்துநடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில்  உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக  தெருவே திமிலோகப்பட்டதுசாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு!



"பெரியவா வராபெரியவா வராதர்சனம் பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தாபாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம்குத்துவிளக்குபுஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்பெரியவாளுடைய வேகம் அப்படி

 இருக்கும்

குள்ள உருவமாக இருந்தாலும்அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல் இருக்கும்ஆனால்கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும்அந்த வேகம்உண்மையான மஹான்களுக்கே ரித்தான லக்ஷணம்!
பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டுசற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்துரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய்முன்தினம்  "பெரியவாளுக்குத்தான்!" என்று முத்ரை குத்தப்பட்டுஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி லாவகமாகயானை தும்பிக்கையால் தூக்குவது போல்அருட்கரத்தால் தூக்கிதானே தன் தலையில் சூடிக் கொண்டார்!
சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழியவிக்கித்து நின்றனர்ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்இப்படி ஒரு பரமகருணையாஎன்று சொல்லமுடியாத ஆனந்தம்திக்கு முக்காடினார்கள்எல்லாரும் நமஸ்கரித்ததும்விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார்
சற்று நின்று திரும்பி,  "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்அவ்வளவுதான்ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் குடுக்கணும் என்று சொல்லிஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார்
இதோஅவர்கள் நேற்று பேசியதை ஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா 'வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்!  ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
 பகவான் ஸர்வவ்யாபிஎன்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக ண்டார்கள்உணர்ந்தார்கள்!

Tuesday, 17 July 2012

மகாபெரியவா சொல்லிக்கொடுக்கும் பஞ்சாயதன பூஜை


“”தென்புலத்தார்தெய்வம்..." என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம்சௌகரியமில்லாவிடில் சுருக்கமாக செய்தாலும் போதும்பத்தே நிமிஷம் போதும்.ஆபீஸ்க்குப் 
போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்ற ஒன்றை செய்ய 
வேண்டும்எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ஈசுவரன்அம்பாள்விஷ்ணுவிநாயகர்சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும்இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர்.
அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது  சம்பிரதாயம்வற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறதுஅம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறதுஅது தங்க ரேக் ஓடிய கல்விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறதுசூரியனுக்குறிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறதுவிநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல்கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்நதியில் அகப்படுகிறதுஆகஇந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண்மூக்குகாது இல்லைஎனவேஇடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாதுஅபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாதுஎல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும்பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லைஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம்ஆவாஹனம் பண்ணிசந்தனம்குங்குமம் அக்ஷதை வைத்துஅர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லைவெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்ட வேண்டாம்வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்ற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம்நைவேத்தியத்துக்கு 
சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம்காய்ந்த திராட்சைப்பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ஐந்து மூர்த்திகள்துளஸி - வில்வ பத்திரங்கள்திராட்சைஅக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும்பிராசீனமாக
நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவதி பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார்ஷண்மத ஸ்தாபனம் என்று வருகிறபோது இவற்றோடு சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டினார்எனவேமேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேளை வைத்து வேலாயுதனை பூஜிக்கலாம்பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவையில்லைமனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார்பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார்எனவேநாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும்உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக்  கொடுத்து விடுகின்றோம்?வெறுமே அவரிடம் காட்டுகிறோம்!பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள்நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லைஅவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம்நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிரஅவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லைநிவேதயாமி என்றால் றிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிரஉண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லைஅப்பனேஇந்த வேளைக்கு உன் கருணையில்  இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்

அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா???செய்ற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும் கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான்பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.   

எங்கும் இருக்கும் அவன்நாம் இருக்கச் சொல்லும் இடத்தில்நாம் கிரகிக்கும்படி நிற்பான்கல்மண்செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான்அப்படிப்பட்ட யோக்கியதையும்கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறதுஇல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.
அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டுஅவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும்இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும்.  நல்லவர்களாவோம்.