Thursday, 13 February 2014

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...


உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா...
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குருவே நீயே....

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய்  நின்றாய் பரமசிவ சங்கரா... 

நீரோடையாய் நடந்தாய்...
பார் முழுவதும் கலந்தாய்...
ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்...
கார்மேகமாய் படர்ந்தாய்...
கருணை மழையென பொழிந்தாய்... தூயவா...

துறவு கொண்ட பாலசேகரா....
சங்கரா.. ஜெய சங்கரா 
தண்டம் ஏந்திய தாண்டவா....
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே 
திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே...

சங்கரா...சங்கரா...
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

5 comments:

  1. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    அன்பு வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.. இந்தப்பாடல் எனது சொந்தப்பாடல் அல்ல. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும், ஒரு தொடரின், Title Song. கேட்பதற்கு, மிகவும் ரம்மியமாகவும், மனதை உருக்குவதாகவும் இருந்ததால், எனது இந்த Blog ல் பதிவு செய்தேன். தங்களுக்கு மீண்டும் என் நன்றி. அன்புடன், குரு

      Delete
  2. அருமையான வாழ்த்துப்பா! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விஜய் தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு வரும், "மஹான்களும்,அவரின் அதிசயங்களும்" தொடரின் Title Song இது. எனது சொந்தப்பாடல் அல்ல.எழுதியவரையே இந்த பாராட்டு சேரும். உங்கள் பாராட்டுக்கு, நன்றி. அன்புடன், குரு

      Delete
  3. மிக்க நன்றி.. இந்தப்பாடல் எனது சொந்தப்பாடல் அல்ல. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும், ஒரு தொடரின், Title Song. கேட்பதற்கு, மிகவும் ரம்மியமாகவும், மனதை உருக்குவதாகவும் இருந்ததால், எனது இந்த Blog ல் பதிவு செய்தேன். தங்களுக்கு மீண்டும் என் நன்றி. அன்புடன், குரு

    ReplyDelete