நாம் நான்கு வழிகளில் பாவங்கள் செய்கிறோம்.உடலினால் தீய காரியங்கள் செய்வது, வாயினால் போய் பேசுவது, சொல்லத்தகாத வார்த்தைகளை சொல்வது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது, பணத்தின் மூலம் பாவச் செயல்களைச் செய்வது. இந்த நான்கின் மூலமாகவே நன்மை செய்ய நாம் பழக வேண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்கோ, கடவுளுக்கு தொண்டு செய்வதற்கோ உடலைப் பயன்படுத்தலாம். வாயினால் பகவானின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். மனம் தான் கடவுள் குடி கொள்ளும் இடம். அதை நாம் ஒரு குப்பைத் தொட்டியாக்கி விட்டோம். அதை சுத்தம் செய்து கடவுளை வீற்றிருக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்து நிம்மதியாக இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடமாவது நாம் தியானம் செய்யலாம். பணத்தினால் ஏழைகளுக்கு உதவி செய்யலாம். கடவுளுக்கு தொண்டு செய்யும் காரியங்களுக்காகச் செலவிடலாம். Monday, 12 March 2012
அருள் மழை - 26 - மஹா பெரியவாள் - அருள்மொழிகள்
நாம் நான்கு வழிகளில் பாவங்கள் செய்கிறோம்.உடலினால் தீய காரியங்கள் செய்வது, வாயினால் போய் பேசுவது, சொல்லத்தகாத வார்த்தைகளை சொல்வது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது, பணத்தின் மூலம் பாவச் செயல்களைச் செய்வது. இந்த நான்கின் மூலமாகவே நன்மை செய்ய நாம் பழக வேண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்கோ, கடவுளுக்கு தொண்டு செய்வதற்கோ உடலைப் பயன்படுத்தலாம். வாயினால் பகவானின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். மனம் தான் கடவுள் குடி கொள்ளும் இடம். அதை நாம் ஒரு குப்பைத் தொட்டியாக்கி விட்டோம். அதை சுத்தம் செய்து கடவுளை வீற்றிருக்க செய்ய வேண்டும். அவ்வாறு செய்து நிம்மதியாக இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடமாவது நாம் தியானம் செய்யலாம். பணத்தினால் ஏழைகளுக்கு உதவி செய்யலாம். கடவுளுக்கு தொண்டு செய்யும் காரியங்களுக்காகச் செலவிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment