Tuesday, 27 March 2012

அருள் மழை - 33 - மஹா பெரியவாள் - மணி-மந்த்ர-ஔஷதம்


ஒரு தம்பதியும், இளம் பெண்ணும் தரிசனத்துக்கு வந்தார்கள். பெண், வெறும் குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள். வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது.


"பெரியவா அனுக்கிரஹம் பண்ணனும்.இவளுக்குக் கல்யாணம்
செய்வதா, வேண்டாமான்னே புரியலை. ரொம்பக் குழப்பாமா இருக்கு."


பெரியவாள் சொல்லிய அறிவுரையில் மணி-மந்த்ர-ஔஷதம் என்று கூறுவதைப் போல,மூன்று வகையான சிகிச்சைகள் இருந்தன.


1.கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காசி விசுவநாதர் கோயில் இருக்கு.அங்கே,மகாமகப் பெண்டுகள் என்று ஏழு தேவதைகள் சந்நிதி இருக்கு. அந்தச் சிலைகளுக்கு வஸ்திரம் சார்த்தி பொங்கல் நேவேத்யம் செய்யணும்.

2]சுயம்வரா பார்வதி மந்த்ரம் என்று ஒரு தேவி மந்த்ரம் இருக்கு. அதைப் போல, விவாஹத்தைக் கூட்டி வைக்கிற வேற சில மந்த்ரங்களும் உண்டு. உங்க வீட்டு வைதீகரைக் கொண்டு, இந்த மந்த்ரங்களை ஆயிரம் ஆவ்ருத்தி வீதம் ஜபம் செய்யச் சொல்லணும்.
3]பெண்ணுக்கு உடல் புஷ்டி வேணும்னா..நாட்டு வைத்தியரிடம் போகணும். அவர் லேகியம் பண்ணிக் கொடுப்பார். அதைச் சாப்பிட்டா பலம் வந்துடும். "கல்யாணம் நன்னா நடக்கும்." கேட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு ரொம்ப சந்தோஷம். தன்னுடைய நல்வாழ்வுக்குப் பெரியவாள் நல்வாக்கு ஒன்றே போதும் என எண்ணினாள்.


ஓராண்டுக்குப் பின்,உடல் நன்றாகத் தேறி, விவாகமாகி,தன் கணவருடன் வந்து, பெரியவாளுக்கு நன்றிப்பெருக்குடன் வந்தனம் செய்தாள், மாஜி குச்சிப் பெண்.

No comments:

Post a Comment