Thursday 22 March 2012

அருள் மழை - 30 - மஹா பெரியவாள் - ஞானிகளின் பார்வை (Gnanigal Parvai)




ராமகிருஷ்ணர் மடத்தில் தன்னார்வ ஊழியராய் பணிபுரியும் அந்த இளைஞர் ஒரு கடையில் வேளை செய்து சொற்ப சம்பளம் பெற்று வந்தார்.  அவர் ஒரு பிரும்மசாரி அவர் மனதில் அப்டிபட்ட ஒரு பக்தி சத்தம் போட்டு பேசி அறியாதவர் பக்தியை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது மடத்தின் துறவிகள் அவருக்கு கொடுத்த மரியாதை அவர்கள் அவருக்கு அளித்த நற்சாட்சி பத்திரம்

அந்த இளைஞன் ஒரு தடவை கஞ்சி மகானை தரிசிக்க காஞ்சி மடத்திற்கு வந்திருந்தார் அதிகமான கூட்டம் பக்தர்கள் வரிசையில் நின்றிருந்தார்கள் இளைஞனும் வரிசையில் நின்றார்

மகான் உட்புறத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தார் வரிசைப்படி அந்த இளைஞர் மகான் முன் வந்து நின்றார்

திடீரென மகானிடம் ஒரு மாறுதல் தன் இருக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தவர் எதிரே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞன் கையை பிடித்து தன்னுடன் அழைத்துப் போனார்

மடத்து சம்ப்ரதாயம் காரணமாக மகான் யாரையும் தொடுவதில்லை ஆசாரமான அந்தணர்கள் மட்டும் நெருக்கமாக இருந்து கைங்கர்யம் செய்ய முடியும் எனவே எல்லோருக்கும் அதிர்ச்சி

சுற்றிலும் நின்றிருந்த பக்தர்கள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்த மகான் இவன் மிகவும் உயர்ந்தவன் என்பதை உணர்த்தும் வகையில் சைகை செய்து அந்த வாலிபரை தன் அருகே அமர்த்திக் கொண்டார் , தனக்கு போட்ட ஒரு மாலையை அவருக்கு அணிவித்து தலையில் மலர் கிரீடமும் வைத்து அழகு பார்த்தார் . பிறகு பிரசாதமும் கொடுத்து அந்த இளைஞரை ஆசிர்வதித்து அனுப்பினார் . இதற்க்கு என்ன காரணம் ?

ப்ரும்மஞனிகள் உள்ளதைத்தான் ஊடுருவி பார்கிறார்கள் இளைஞனின் உள்ளம் எப்படிபட்டது என்பதை மகான் அறிந்திருக்கிறார் அதற்க்கு இதுவே சாட்சி

பலவருடங்களுக்கு பிறகு ஒவொரு அம்மவாசையும் காசியில் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யும் பொறுப்பை ஏற்றிருகின்றார்

மேலும் பக்தர்களை குறைந்த செலவில் கயிலாய யாத்திரைக்கு அழைத்து செல்லும் பெரும் பேற்றையும் பெற்றிருகின்றார் அந்த இளைஞார்

அவர் இன்னமும் ப்ரும்மசாரிதான் ராமகிருஷ்ணா மடத்தின் தன்னார்வ தொண்டர்தான்

No comments:

Post a Comment