Wednesday 14 March 2012

அருள் மழை - 27 - மஹா பெரியவாள் - ராமேஸ்வரம் - அரிசி சேமிக்க ஆணை (S Order to Stock Rice in Rameshwaram Sankara Mutt - Miracle)

 1964 ம் வருஷ ஆரம்பத்திலேயே மடத்துக்கு அரிசி மூட்டை உபயமளிப்பவர்களை, ராமேஸ்வரத்திலுள்ள நமது மடத்துக்கு அதனை அனுப்பும்படியாக பெரியவா கட்டளையிட்டு வந்தார்கள்.எதற்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக் செய்ய சொல்கிறார் என்று மடத்து மானேஜருக்கு புரியவில்லை. இது விஷயமாக அவருக்கு பெரியவாளிடம் மனஸ்தாபமே வந்து விடுமோ எனும்படியான சந்தர்பங்கள் ஏற்பட்டதுண்டு.  னாலும் பெரியவா ஒரே பிடிவாதமாக கால் ஆயிரம் மூட்டைகளை ராமேஸ்வரத்தில் சேர்க்க செய்தார்.

அவ்வாண்டு டிசெம்பர் கடைசியில் ராமேஸ்வரத்தில் கடும் புயல் வீசிற்று, பாம்பன் பாலம் தகர்ந்தது. தனுஷ்கோடி மூழ்கியது. கடலின் கொந்தளிப்பை மீறி ராமேஸ்வரத்திற்கு உணவு பண்டம் அனுப்புவது இயலாத காரியமாயிற்று.


இந்த பயங்கர சூழலில், ராமேஸ்வரத்தில் சிக்கி கொண்ட ஆயிரமாயிரம் உதரம் நிறைய உதவி பண்ணியது....ஆம்......பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசிதான்.

No comments:

Post a Comment