Wednesday 2 January 2013

"காமோகார்ஷீத்" - செய்வதன் காரணம் என்ன? காயத்ரிஜபம் அன்று எல்லோருமே காயத்ரிஹோமம் செய்ய வேண்டும் - பரமாச்சாரியார்



இப்பொழுது ஆவணி அவிட்டம் அன்று மட்டும், நாம் ஒரு நாள் உபாகர்மாவைத்தான் பண்ணுகிறோம்.  அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் (ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது) பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக 'காமோகார்ஷீத்'ஜபம் பண்ணுகிறோம்;"நான் பாபம் பண்ணவில்லை;காமம் பண்ணியது, கோபம் பண்ணியது;என்னிடம் வராதே;நமஸ்காரம் பண்ணுகிறேன்!" என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை.


காயத்ரிஜபம் அன்று எல்லோருமே ஹோமம் செய்ய வேண்டும்


கால நியமம், விரத நியமம், ஆஹார நியமம் முதலியவைகளை அநுஷ்டிப்பது பிரம்மச்சரியம். அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள் மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும்.



No comments:

Post a Comment