Sunday 6 January 2013

மாதர் குல திலகம் திலகவதியார்




ஒரு பெண் யாரை மனதில் நினைக்கிறாளோ அல்லது பெற்றோர் யாரை முடிவு செய்கிறார்களோ அவரோடு கடைசிவரை குடித்தனம் செய்வது என்ற கொள்கையுடன் அக்காலத்தில் திகழ்ந்தனர். பணம், அழகு எதையுமே அவர்கள் சட்டை செய்யவில்லை. 

அதிலும் திலகவதி என்ற பெண்மணி, நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்துவிட்டார் என்பதற்காக, வாழ்வின் இறுதிவரை கைம்பெண்ணாக வாழ்ந்தார் என்றால், அந்த தியாகத்திற்கு ஈடுஇணை ஏது! திருவாமூர் என்ற தலத்தில் வசித்த வேளாளர் குடும்பத்தில் தலை சிறந்தவர்கள் புகழனார்-மாதினியார் தம்பதி. இவர்களது செல்வமகள் திலகவதி. இவரையடுத்து பிறந்த மகனுக்கு மருள்நீக்கி என்று பெயரிட்டனர். 

அக்காவுக்கும், தம்பிக்கும் வயது வித்தியாசம் அதிகம். திலகவதிக்கு பல்லவமன்னனின் சேனாதிபதியாக இருந்த கலிப் பகையாருக்கு திருமணம் செய்து வைப்பதென முடிவு செய்தனர்.மணமக்கள் எதிர்கால வாழ்வு பற்றி இன்ப வானில் மிதந்து கொண்டிருந்த வேளையில், திலகவதியின் தந்தை புகழனார் இறந்து போனார்.

அப்பர் ஸ்வாமிகள் அந்தப் பேர் பெறாமல், மருள் நீக்கியார் என்ற பெயரில் பாலராக இருந்தபோது அவருடைய தகப்பனாரான புகழனார் மரணமடைந்துவிட்டார். அப்பொழுது பதிவிரதையான மாதினியார் என்ற அவருடைய பத்தினி உடன்கட்டை ஏறினாள் என்று 'பெரிய புராணம்'சொல்கிறது.

கணவன் சென்ற வருத்தம் தாளாமல் மனைவி மாதினியாரும் பின்தொடர்ந்து விட்டார். எவ்வளவு உயர்ந்த காதல் பாருங்கள். திலகவதியும், மருள்நீக்கியும் அனாதையாக விடப்பட்டனர். இருப்பினும், கலிப்பகையாரின் குடும்பத்தார், திலகவதியாரை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வதில் பின்வாங்கவில்லை. விதியைப் போன்ற கொடிய ஆயுதம் உலகில் ஏது!

பதிவிரதையான மாதினியார் கற்பை விட உசந்ததாயிருக்கிறது, இவர்களுடைய புத்திரி (அதாவது அப்பரின் தமக்கை) காட்டிய பாதிவ்ரத்யம். சின்ன வயசுதான். இன்னம் கல்யாணமாகவில்லை. கல்யாணமாகாமலே கற்பு என்பதுதான் விசேஷம்!

வடநாட்டிற்கு போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் கலிப்பகையார். வெற்றியுடன் திரும்புவேன், என் மணநாள் பரிசாக அதை உங்கள் திருவடியில் சமர்பிப்பேன், என மன்னரிடம் சூளுரைத்து கலிப்பகையார் கிளம்பினார். கொடிய சண்டை நடந்தது. 

கலிப்பகையாரின் வீரம் கண்டு வடநாட்டு மன்னன் அஞ்சினான். படைகள் பின்வாங்கி ஓடின. வீரத்தால் அவரை வெற்றி கொள்ள இயலாது எனக்கருதிய வடமாநில மன்னன், வஞ்சகமாக அவரைக் கொன்று விட்டான். வீரமரணம் அடைந்தார் கலிப்பகையார். தந்தை போனார், தாய் போனார், கட்ட இருந்த மணமகனும் போய் விட்டார்..

ஆனால் புகழனார் இறந்த அதே சமயத்தில் நல்ல வாலிபரான கலிப்பகையும் யுத்த பூமியில் வீர ஸ்வர்க்கமடைந்து விட்டார் என்ற தகவல் வந்தது. 

உடனே அந்தச் சின்ன பெண், "அவருக்கென்று என்னை எப்போது பெரியோர்கள் நிச்சயம் செய்துவிட்டார்களோ அப்போது அவருக்கு நான் மனைவிதான். எனக்கு இந்த எண்ணம் வந்த பிறகு நான் இன்னொரு ஆடவனுக்கு மாலையிட மாட்டேன். அவர் போய்விட்டதால் நானும் பிராணத் தியாகம் பண்ணிவிடப் போகிறேன்"என்று அதிசயமான கற்பு வேகத்தில் புறப்பட்டு விட்டாள்.

தன் தம்பியை மறந்துவிட்டாள். அக்கா! அப்பா இல்லை, அம்மா இல்லை, உன்னை கட்ட இருந்தவர் இங்கு வந்திருந்தால் மாமா என அவர் மடியிலாவது சாய்ந்திருப்பேன். ஆறுதலைத் தேடியிருப்பேன், அவரும் போய்விட்டார். இப்போது, நீயும் போகிறாயா! சின்னஞ் சிறுவனான நான் தன்னந்தனியாக என்ன பண்ணுவேன்? அப்படி சென்றால் உன்னோடு என்னையும் அழைத்துப் போய்விடு. தாய் தந்தைக்குப் பிறகு இப்போது நீயே என் பெற்றோர், சகலமும் நீயே, என்று கதறினார் மருள்நீக்கி.

அக்கா தன் தம்பியை வாரி அணைத்துக் கொண்டாள். அன்புச்செல்வமே! ஒரு பெண் வாழ்க்கையில் ஒருவனுக்கு மனைவியாவதற்காக பேசி முடிக்கப்பட்டு விட்டால், அவனை நினைத்தே வாழ்வாளடா! என்னை மணம் முடிக்க இருந்தவர் போய்விட்டார். இனி என் மனதில் யாருக்கும் இடமில்லை.,என்னால் வாழ இயலாது என்றாள். 

இருப்பினும், அவள் மரணத்தை தழுவ இருந்த வேளையில், தம்பியின் இரண்டு பிஞ்சுக் கரங்கள் தனது கால்களைக் கட்டிக் கொண்ட காரணத்தால், வேறு வழியின்றி தம்பியின் பராமரிப்புக்காக பரமத் தியாகமாக அவள் உயிர் வாழுவது என்ற முடிவு செய்தாள். கணவனை இழந்த பெண்கள் எப்படி இந்த பூமியில் கைம்மை நோன்பு பூண்டு வாழ்கிறார்களோ அப்படி திலகவதி எனற பேருக்கேற்ப மாதர் குல திலகம் என்கிறார்களே, அப்படி வாழ்ந்தாள். மருள்நீக்கியை பெரும் பக்தனாக வளர்த்தாள். பிற்பாடு ஜைனத்துக்குப் போய் தர்மஸேனராகிவிட்ட மருள்நீக்கி மறுபடி சைவத்துக்கு வந்து நாமெல்லாம் கொண்டாடும் அப்பர் ஸ்வாமிகளாக ஆனதற்கு அவள்தான் காரணம். 

No comments:

Post a Comment